முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
அண்டருக் கிடுக்கண்10 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

அண்டருக் கிடுக்கண்

24ஆசிரியப்பா✓
அண்டருக் கிடுக்கண் அகற்றுவான் வேண்டிச்
சிவமெனும் செம்பொருள் நவமாய்த் தோன்றி
ஐந்து முகத்தோ டதோமுகஞ் சேர்த்து
ஆறுமா முகத்தோ டவனியில் வந்து
கலியுக வரதனாய் நலிவுகள் தீர்த்தே
கந்தனெனு நாமம் கவின்பெறப் பூண்டு
நவரத்ன முடியும், நறைகமழ் நுதலும்,
பன்னிரு விழியும், பவள வாயும்,
இலகுதிண் செவியும், ஈராறு கரங்களும்
குறுமென் நகையும், முறுகிய நூலும்,
தாளும், சதங்கையும், தண்டையும், சிலம்பும்,
சேவலும், மயிலும், வேலும், பாம்பும்,
கானக் குறமகளும், வானகுஞ் சரியும்
தன்னிரு மருங்கும் மன்னிவீற் றிருக்க
ஞானமே உருவாய் மோனமே பொருளாய்
என்னகத் தேயொளிர் சுன்னையம் பதிசேர்
மயிலணிப் பதிவாழ் மாசிலா மணியே!
அருள்மதி எந்தாய்! தெருள்நனி செழிக்கவே.
25நேரிசை வெண்பா✓
செல்வமுஞ் ஞானமுஞ் சீர்த்தியும் நல்வாழ்வுங்
கல்வியும் வாய்மையுங் கையளிக்குஞ் — சொல்லு
மனமொழிக் கெட்டா மயிலணிவாழ் சேயைத்
தினமும் பணிவாய் தெளிந்து.
26கட்டளைக் கலித்துறை✓
பதிபசு பாசத் தியற்கையும் புண்ணிய பாவமும்வெவ்
விதிவலி தன்னையும் வேண்டி அறிந்திலன் வீணிலியான்
சதிசெயு மாந்தரின் சங்கமும் சால்பெனச் சாதிக்குமென்
மதியினை என்னென்று கூறுவன் சுன்னையின் மாமணியே.