முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
பத்தியொடு நித்தமுன்2 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

பத்தியொடு நித்தமுன்

1நேரிசை வெண்பா✓
பத்தியொடு நித்தமுன் பாதம் பணியுமென்றன்
சித்தம் தெளிவிக்கும் செவ்வேளே!—நித்தமும்
நேசமாய்த் தீவினையை நீக்கி அருள்வையேற்
பாசத்தால் எற்கென் பயம்.
2கட்டளைக் கலித்துறை✓
பயமின்றி வாழ வழியுண்டு சுன்னைப் பழம்பதிவாழ்
கயலுண்கண் வள்ளி கணவன் குமரன்றன் கான்மலரை
மயலின்றி வாழ்த்தி மலமூன்றும் போக்கி மகிதலத்திற்
செயலற்று யாவும் அவனரு ளென்று தெளிந்திடினே.