எவ்வகை இடரையுஞ் செவ்வனே தீர்க்கும்
வெயில்நுழை பறியா மயிலணிப் பதிவாழ்
முருகா போற்றி, முருகா போற்றி,
இலகுவெண் நீறும் திலகமும் அணிந்து
பூசைப் பொருள்களை ஆசையோ டேந்திச்
சிரத்தில் வைத்த கரத்தோ டேகிக்
தலத்தைச் சுற்றி வலமாய் வந்து,
பத்தியோ டர்ச்சனை நித்தமுஞ் செய்து,
நவத்தமிழ் மறையை உவப்போ டோதி,
நாத்தழும் பேறத் தோத்திரஞ் செய்து,
கந்தன் பெருமையைச் சந்ததங் கூறி,
உடல் பொருள் ஆவியைத் திடமுடன் அளித்துப்
பேரருள் முருகன் சீரருள் பெற்றுப்
பயந்துதீ வினையை நயந்து நீக்கி,
வாழும் பெரியோர் தாமும் மயிலணிப்
பதியுறை எமையுங் கதிபெற் றோங்க
அருள்செய் குவையே ஆறுமா முகனே.