அறுசுவைக் கறியும் நறுநெயுஞ் சோறும்,
வெறிகமழ் குழம்புஞ் செறிபுளிச் சாறும்,
சில்வகைப் பொரியலும் பல்வகை அரையலும்,
அப்பளம் பாயசம் ஒப்பில்பல காரமும்,
மட்டில் கனிகளும் கட்டித் தயிரும்,
இன்னன பற்பல துன்ன இயற்றி
வருவிருந்து பார்த்துப் பெருவிருந் தோம்பும்
தாளாண்மை குன்றா வேளாண் மக்கள்
வதியும் பெருமைப் பதியாஞ் சுன்னை
மயிலணித் தனிவாழ் அயில்வேற் குமர!
வேண்டுவன் ஒன்று கேண்மதி ஐய!
வரமுறு முத்தி திரமுறச் சேர்க்கும்
மாறாக் கருணைகூர் ஆறக் கரத்தை
அன்புடன் என்றும் இன்புற ஓதியுன்
செஞ்சர ணத்தை அஞ்சலி செய்தே
சஞ்சித வினைகள் எஞ்சா வண்ணம்
அருளினைச் செய்தென் மருளினைத் தீர்க்கவே.