முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
அன்பே உருவாய்7 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

அன்பே உருவாய்

15ஆசிரியப்பா✓
அன்பே உருவாய் அறுகுணங் காட்டும்
மூவிரு முகங்களும் மேவி ஒன்றாய்க்
கந்தன் என்னுங் கவின்பெறு நாமம்
பயின்று விளங்கும் மயிலணி முருகனை
குன்றைக் கூறுசெய் குமரன் என்கோ?
இருதயக் குகைவாழ் ஈசன் என்கோ?
தாரகன் சிங்கன் மாரகன் என்கோ?
தத்துவ கூடமாம் சரவணம் என்கோ?
சித்தா காசமாம் சீரிய வெளியில்
பொற்புற ஓங்கும் பேரொளி என்கோ?
வள்ளிதெய் வானை மணாளன் என்கோ?
தேவர்கள் இடுக்கணைத் தீர்த்தவன் என்கோ?
வேதமயி லேறும் நாதன் என்கோ?
ஆசிலா அறுமுகத் தேசிகன் என்கோ?
அஞ்ஞானம் நீக்கும் மெய்ஞ்ஞா னனுக்கு
கண்களும் ஈராறே, கரங்களும் ஈராறே,
முகங்களும் ஆறே, மூலமந்திர முமாறே,
தலங்களும் ஆறே, தகுகுணங் களுமாறே,
அம்மகோ! அவன்தன் விம்மிதஞ் சேரும்
பெருமையை உரைக்க அருகன் ஆவனோ?
அவன்திறம் என்றும் அன்புடன் கூறியே
ஆசானாம் முருகன் தாசன் ஆவனே.
16நேரிசை வெண்பா✓
முருகவேள் நல்லருளை முப்போதும் பெற்றே
அருவினையை ஓட்ட அருளாய்—அருவுருவாய்ச்
சொற்பொருளுக் கெட்டாத சோதியே சுன்னைவாழ்
அற்புதனே பாலித் தருள்.
17கட்டளைக் கலித்துறை✓
பாக்கிளர் செந்தமிழ்க் கோவையைப் பாடிப்பணியுமெனக்
காக்குதல் உந்தன் கடனெனச் சற்றுங் கருதலையே
ஆக்குங் கடவுளுக் கோங்கார மந்திரம் அன்றுரைத்துத்
தேக்கும் படிசெய்த சேந்தநற் சுன்னையிற் றேசிகனே.