முருகன் App
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
அண்டரைக் காக்கும்12 / 12
மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

அண்டரைக் காக்கும்

30ஆசிரியப்பா✓
அண்டரைக் காக்கும் அறுமுகா! போற்றி,
கலியுக வரதா கந்தா! போற்றி,
குறத்தியை மணந்த குமரா! போற்றி,
சேவற் கொடியுடைச் செவ்வேள்! போற்றி,
ஈசற் கோதிய ஆசான்! போற்றி,
சிந்தனைக் கெட்டாச் சேயே! போற்றி,
புலமையிற் சிறந்த புலவா! போற்றி
தலந்தொறும் இருந்தருள் சிலம்பா! போற்றி,
விருப்பு வெறுப்பில் விசாகா! போற்றி,
திருமால் மருகா! முருகா! போற்றி,
வேளே! குறிஞ்சி வேந்தே! போற்றி,
சரவண பவனே! சண்முகா! போற்றி,
மயிலணிப் பதிவாழ் மன்னா! போற்றி,
போற்றி போற்றிநின் பொற்பதம் போற்றி,
போற்றி போற்றி போற்றி என்று
நித்தம் ஏத்திப் பத்திசெய் குவனே.