தேசிகம் பூத்த மாசிலா மக்கள்
கூரிய மதியாற் சீரிய முறையிற்
செந்தமிழ் நூல்பல செவ்வனே கற்றுச்
சந்ததம் ஆகமத் தடங்கடல் மூழ்கிச்
சித்தாந்த சைவ தத்துவம் ஆய்ந்து
அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்றே
கள்ளம் இல்லா உள்ளக் கோயிலில்
நிறையருள் ஞானம் உறைபெருஞ் சோதியை
அன்பெனும் பாலால் இன்போ டாட்டி
சரவண பவனே! சண்முக நாதா!
கந்தா! கடம்பா! கார்த்தி கேயா!
என்னுனின் நாமம் பன்முறை சொல்லிப்
போற்றி நிற்கும் ஏற்ற முளோர்வாழ்
சுன்னைப் பதிமேவு மன்னு மயிலணிப்
புண்ணியப் பதியை நண்ணிடும் முருக!
அன்னையில் இனிய இன்னருள் மூர்த்தி!
என்னிலும் எனக்கு இனியவன் நீயே!
வேண்டிய அளிக்கும் ஆண்டலைக் கொடியோய்!
அன்பிலன் அடியேன் தென்பில னேனும்
உள்ளத் துன்கழல் விள்ளா அன்பனை
கருணை கொண்டு மருள்நீக்கி அருளே.