முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
உற்றவ ரென்ன4 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

உற்றவ ரென்ன

8நேரிசை ஆசிரியப்பா✓
உற்றவ ரென்ன உலகினர்க் கருதிப்
பற்றகல் பெரியோர் படிவங் காட்டிப்
பொன்மயல் பெருக்கிப் புலருந் தமியேன்
நன்மனத் தொண்டர் நனந்தலை வைகி
எவ்வகைப் பேறும் இனிதுபெற் றமைந்து
பௌவநீர் புரையும் பகைப்பெருக் கொழித்துன்
தண்டையங் கமலத் தாளிடை புகற்காம்
பண்டை மாதவப் பயனிலேன் எனினும்
காப்பதுன் கடன்;நிற் கான்முளை யென்ன
மோப்பவள் இளமென் முலைநலம் புணர்வான்
கடம்பமால் வனத்தோர் கானவ னாகித்
திடம்பெறப் புரந்த தீயனிற் கடையேன்
அல்லன்யான்அறிதி! அதன்பயன் சிறிதுள
கொல்லலின் முயலார் குமார புரியில்
வன்னமா யிரம்பெறும் மயின்மேல்
மின்னகும் வேலொடு விளங்குதே சிகனே.
9வெண்பா✓
தேசிகனை வேலெடுத்த சேவகனைச் செம்பவளப்
பாசியணி வாட்கினிய பான்மையனை - ஆசில்
குமாரபுரிக் கோயிற் குகவேளை யன்றி
எமாதுளத்தில் மற்றொன் றிலை.
10கட்டளைக் கலித்துறை✓
இலையார்ந்த வெண்பொடி நல்கியன் றென்னொ டியம்பியசொல்
நிலையாமென் றெண்ணி யிறுமாந் துளேனை நிலத்தினரும்
விலையாரும் புன்பொருள் வேண்டவிட் டாயிதொர் வேடிக்கையோ
தலையாய செல்வக் குமார புரியிற் சரவணனே.