முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
குருவென வுலகிற்7 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

குருவென வுலகிற்

17நேரிசை ஆசிரியப்பா✓
குருவென வுலகிற் குலவல் எலாம்நின்
திருவுரு வென்னத் தெளிதரப் பெற்றும்
புலைநெறிக் கொடியோர் புன்மை நாடி
மலைவுறும் கொடுமை மாற்றி யருளாய்
தண்புனற் பணையிற் றுயங்கும் வாளை
விண்புகின் உறிஞ்சி விரிபூ வுதிர்தரு
கொன்பொழில் உடுக்கும் குமார புரியில்
நம்புநர் வேண்டுவ நல்கி
அம்புவி புரக்கும் அயிற்கைவா னவனே.
18வெண்பா✓
வானவர்தம் வாழ்க்கையையும் வம்பென் றருவருக்கும்
ஞானமுறப் பெற்றபின்னும் நானிலத்து - மானனையார்
பார்வைக் குருகப் படுமோ குமாரபுரி
ஊர்வைகும் வேலா உரை.
19கட்டளைக் கலித்துறை✓
உரையிறந் துற்றமெய்ஞ் ஞானாநு பூதி யுடையவர்தாம்
தரையினிற் கூடும்நன் னாள்வர வேண்டித் தவிக்குமென்னைக்
கரைதவிர் மாயைக் கடலூ டமிழ்ந்து கலங்கவிடேல்
புரையில்வல் லோர்மிகப் போற்றுங் குமார புரிக்குகனே.