முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கார்முகில் பொதிந்து2 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

கார்முகில் பொதிந்து

2நேரிசை ஆசிரியப்பா✓
கார்முகில் பொதிந்து கரியமா லென்னச்
சீர்மிகத் தருபல சிகரி தோறும்
கொடிநடம் பயின்று குமார புரியில்
அடியவர் வாழ்வான் அவைமுழு தொல்க
வந்தினி தமர்ந்தென் மனங்கவர்ந் தொருமை
தந்தியற் பனுவல் தருகென இரந்தும்
இசைவுரு மாற்றம் இயம்பச் செய்தும்
நசைமிகை படவே நவிலுமா றசைத்தும்
உலகினர்க் குரைக்கில் ஒய்யென நகற்காம்
பலவிளை யாடல் பயின்றும்வாழ் குகனே!
எவ்வகைத் துயர்ஈண் டெய்தச் செயினும்
பௌவநீர்ப் புவியோர் பைம்பொன் வேட்கை
ஒன்றும்வந் தென்னிடத் தொன்றா(து)
இன்றுதொட் டின்னே இயற்றுதி யினிதே.
3வெண்பா✓
இனிய கடலைபய(று) எள்ளுண்டை பற்பல்
கனியனைய கொள்ளுங் களிறு - நனிவிரும்பும்
கோலத் துணைவா! குமாரபுரிக் கோமானே!
காலத்துக் கஞ்சாமற் கா.
4கட்டளைக் கலித்துறை✓
காகாவென் றெத்தனை நாளிரந் தேனெனைக் காண்கிலைகொல்?
போகாந்த காரத்தை நாடாத வண்ணம் புரந்திலையே
ஆகாத பிள்ளையென் றால்அந்த ஞாயம் அறைகுவையோ
வாகார் குமார புரிக்கோயி லூடென்றும் வாழ்கந்தனே.