முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
புரிமருப்(பு) ஆட்டின்8 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

புரிமருப்(பு) ஆட்டின்

20நேரிசை ஆசிரியப்பா✓
புரிமருப்(பு) ஆட்டின் புறத்தில் ஏறி
எரிவளர்த் தோம்பும் இகத்துமா தவரும்
வானகத் திமையா வாழ்க்கை யோரும்
மானமற் றழியா வண்ணம் காத்த
பெரும்புகழ் கருதிப் பிறங்கொளி மதுரம்
விரும்புமெய் யுணர்ந்த வியன்றமிழ்க் கவியால்
போற்று மென்னைப் புறம்பெனத் தள்ளா(து)
ஏற்று வாகனத்(து) இறைவனா தியர்க்(கு)
அன்றளித் தருள்பே றமைக்க வேண்டும்
குன்றலில் வளமைக் குமார புரியில்
எவ்வெவர் எவ்வா றெண்ணினும் இகழா(து)
அவ்வவர்க் கவ்வா றவிர்தரும் அருள்கொண்(டு)
இருமயி லன்னார்க்(கு) இடையில்
ஒருமயிற் பரிமீ தொளிர்உர வோனே.
21வெண்பா✓
உரங்கொண்ட வேலானை ஒண்மழுவான் வேண்டும்
சிரங்கொண் டுதவுமொரு சேயைக்-கரங்கொண்டு
கும்பிடுவோர்க் கிந்தக் குமாரபுரி போலமுற்றும்
நம்பிடும்ஊர் இல்லைசொன்னேன் நான்.
22கட்டளைக் கலித்துறை✓
நானென்ற ஆணவப் பேய்வந் துறுக்க நலியுமென்னைத்
தானென்ற நன்னிலைக் கென்றமைப் பாய்அருட் சண்முகத்தோர்
கோனென் றறிகிலர் தம்மையுங் காத்துக் குமாரபுரி
வானென்ற வாழ்வுறச் செய்யுமெந் தாய்மயில் வாகனனே.