முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
சரவுயிர்க் கொலைக்கும்5 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

சரவுயிர்க் கொலைக்கும்

11நேரிசை ஆசிரியப்பா✓
சரவுயிர்க் கொலைக்கும் சற்றும் அஞ்சா
அரவுறம் பொல்லார் அளவில் பல்லோர்
வாழ்வுறும் இந்நாள் மகிதலத் தென்னைத்
தாழ்வுறப் படுத்தல் தருமந் தானோ
என்னகம் கரியா இனிது தோன்றி
முன்னவின் றுளவா முடித்தருள் புரிவாய்
கோதகல் வளந்தோய் குமார புரியில்
சீதரன் முதலோர் தெண்டனிட் டேத்தச்
செந்துவர்க் கிரியெனத் திகழ்ந்து
முந்துமெய்ஞ் ஞான மொழிபகர் குகனே.
12வெண்பா✓
குகனைக் குமாரபுரிக் கொற்றவனை யீசன்
மகனைத் தினங்கருதி வாழ்வோர் - புகழும்
இருநாலு சித்தியுமுற் றெய்துமுத்தி வேண்டித்
தருநாட்டை யெள்ளுமவர் தாம்.
13கட்டளைக் கலித்துறை✓
தாமக் கருங்குழ லார்மையல் நோயிற் றவிக்குமென்னைச்
சேமப் படச்செய்ய வல்லாயன் றோவென்றன் சிந்தையுட்பல்
யாமத்தும் சொன்னசொல் லெல்லாம்பொய் யோசெந்தி லேயனைய
காமர்க் குமார புரியாளும் வேற்படைக் கைத்தெய்வமே.