தெய்வத் திருமொழிச் செழுந்தமிழ்ப் புலவோர்
செய்வகை யாவும் திரைநீர்ப் புவியோர்
பற்பல வாறு பகரக் கேட்டென்
அற்ப நெஞ்சம் அலமர லறிந்தும்
அத்திற லொருசற் றருளிலை யந்தோ
சத்திவேற் படையொடு தமியே னிடைவந்(து)
என்னைநின் கிளியென் றிசைத்த மாற்றம்
தன்னையிவ் வுலகோர் தாமும் அறியச்
செய்யும்நாள் நினைத்துத் தியங்கவும் கண்டாய்!
பெய்யும்வால் வளையார் பிரமையும் ஓர்பால்
வந்துறச் செய்தாய்! மறுதுணை அறியேன்
சிந்துரம் உலவுந் தெருநலம் குலவும்
பொற்புறு குமார புரியிற்
சிற்பர மாகித் திகழ்ந்தசண் முகனே.