முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கனக மாலறக்9 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

கனக மாலறக்

23நேரிசை ஆசிரியப்பா✓
கனக மாலறக் கழுவி அப்பால்
அனநின் திருவாய் அறைந்த வாறு
மூவுல குணர முயன்றிடும் கிணற்றில்
ஓவுறா நதியொன் றொளிர்தரக் காட்டி
மீனுறழ் கண்ணார் வேட்கை முதலாய்
யானுளத் தமைக்கும் யாவும் நீத்துன்
திருவடி யதனிற் சேர்தரக் கொண்டு
வருபிறப் பொன்றும் மருவா தருள்வாய்
சத்தி வேற்கைச் சரவணன் றானே
முத்தி முதலெனும் முனிவோர் குறிக்கும்
சமய நெறியின் தலைப்பெயர் வாய்ந்து
கமலை மனையுறழ் கவினொடு பொலிந்து
புகழ்பெறுங் குமார புரியில்
நிகரில்வேல் பிடித்து நின்றசே வகனே.
24வெண்பா✓
சேவேறு வார்க்கினிய தேசிகனைச் செங்கமலப்
பூவேறு வானைப் புடைத்தானைப் - பாவேறும்
செல்வக் குமாரபுரிச் சேந்தனைப்போற் றாப்புலவோர்
சொல்வக் கணைநம் துயர்.
25கட்டளைக் கலித்துறை✓
நந்தமர் செங்கைத் திருமால் மருகன் நறைக்கடப்பங்
கொந்தலர் மாலை கொடுத்தாலென் பேதையைக் கோரநமன்
வந்தனம் செய்குவன் நிந்தைவிட் டேத்தி வணங்கும்மரப்
பொந்தமர் கிள்ளை பயிலுங் குமார புரிமுற்றுமே.