முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கந்தனென் றொருவன்3 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

கந்தனென் றொருவன்

5நேரிசை ஆசிரியப்பா✓
கந்தனென் றொருவன் வைவே லேந்திக்
கொந்தலர் சோலைக் குமார புரியில்
தன்னடி யவர்பாற் றறுகண் செய்வார்க்(கு)
இன்னலும் ஏனையர்க்(கு) இன்பமும் நல்கி
வாழ்ந்துளான் என்னும் மாற்றம் வினவித்
தாழ்ந்துபோற் றிசைத்துச் சண்முக மலரும்
பவளவெற் பினம்நிகர் பன்னிரு தோளும்
தவளநீ றணிவார் தலைமணங் கமழும்
பங்கயத் துணைப்பூம் பதங்களும் கருதிச்
சங்கரன் திருமால் சதுமுகன் முதலோர்
தமையெலாம் இகழ்ந்து சாற்றரும் பேதம்
அமைதரு சமயத் தவரொடும் பிணங்கி
இருந்தவென் பால்அவண் எய்தி எய்தித்
திருந்துபே ரறிவாத் திகழ்தரு தன்னை
அன்றிமற் றின்றென அதட்டி
என்றிறன் றனையும் ஏற்றிலங் கினனே.
6வெண்பா✓
ஏற்றுப் பரியாற்(கு) இசைத்ததனை என்செவியிற்
சாற்றுகெனக் கேட்கை தகாததோ - கூற்றுமட்டும்
வாராக் குமாரபுரி வாழ்குகனே வண்டமிழ்கொண்(டு)
ஏரார் கிளிக்குரைத்தா யே.
7கட்டளைக் கலித்துறை✓
தாயார் முதற்பகர் நால்வகைச் சார்புந் தமிழ்விரும்போர்
சேயாய்த் திகழ்ந்த(து) அதஞ்சீர் உரைக்கிற் செழும்கமல
மேயானைக் குட்டித் திருமாலைக் காத்தரன் வேண்டுபொருள்
வாயாரச் சொல்லிக் குமார புரியின் வயினுற்றதே.