முருகன் App
முருகக் கடவுள் மும்மணிக்கோவை
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
முற்றும்நின் செயலென10 / 12
முருகக் கடவுள் மும்மணிக்கோவை · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

முற்றும்நின் செயலென

26நேரிசை ஆசிரியப்பா✓
முற்றும்நின் செயலென மொழிதரு மென்னை
எற்றும் தொழிலும் என்வாய்ச் சொற்கள்
காமுறு நலமும் கருதிநன் குணரின்
மாமுதல் தடிந்து மகபதி முதலோர்
தம்மைமுன் புரந்த தனிப்புகழ் மறந்து
வெம்மையார் காட்டில் வியனுருப் பொலிபேய்க்
கணத்தொடு நடித்துக் கராமக வுமிழப்
பணத்தகு புலவன் பகர்தரு முதற்பேர்
மெய்ப்படப் பெற்றேன் விதுவார் நாளில்
உய்ப்பது பெற்றான் உருற்றும் பூசை
கொண்டவள் அருளாற் கொடுத்த மகவென
விண்டயர் கின்றேன் வெறுத்தெனை விலக்கேல்
செந்தில் ஏரகம் திருமலை முதலாம்
முந்தியற் கோயில் முழுமையும் அழுக்கா(று)
எய்தத் தகும்பே ரியற்கையொன் றெய்திய
புண்ணியக் குமார புரியில்
திண்ணிய வேல்கொடு திகழ்கிழ வோனே.
27வெண்பா✓
கிழவனுருக் கொண்டுகுறக் கிள்ளையிடம் சென்றாய்
மழலைமொழிச் சேயுருவில் வந்(து)ஆள் - அழகியபொற்
றோகைமயில் வீரா துகள்சீர் குமாரபுரி
வாகைவடி வேற்கையிறை வா.
28கட்டளைக் கலித்துறை✓
இறையள வேனும்நின் மெய்யன் பிலேன்எனை யேற்றுமனக்
குறைதவிர்த் தாளவும் வல்லாய்கொ லோதென் குமாரபுரி
நிறைதருஞ் சீரெய்த வந்தாய் தினமும் நினைப்பவரைப்
பிறைமுடிக் கும்படி செய்வாய் எவர்க்கும் பெரியவனே.