பெரியவர் நால்வர் பேணி யேத்த
அரியகல் லாற்கீழ் அமருங் குரவன்
பரவும்நிற் பழிச்சும் பான்மை யேனை
விரவும்ஆ ணவநோய் வேரற முறுக்கி
வடவரைப் புடைத்த வழுதி வலியும்
கடல்குடித் தான்றோன் கல்விப் பேறும்
சண்பையூர்ப் புலவன் தனது மாண்பும்
விண்புரைந் துருப்போல் விளங்குங் கவினும்
பெறக்கொடுத் தாண்டுன் பெய்கழற் றுணைத்தாள்
உறக்கொள்வான் ஒருசற் றுளமினி திரங்காய்
வால்வளை முரலும் மலர்ப்பெரு வாவி
சால்வளம் பொலிந்து தமறிய நகரி
புரைதரு குமார புரியில்
தரைமுழு துய்யத் தரித்தகாங் கெயனே.