முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
'ஓம்' எனும் மந்திர ரூபம்11 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

'ஓம்' எனும் மந்திர ரூபம்

11✓
'ஓம்' எனும் மந்திர ரூபம் — மயில்
ஓங்கி விரிக்கும்க லாபம்! — 'கொக்
கறுகோ' துயில் எழுவீர், இறை
வழிபாடுசெய் அதிகாலையென்(று)
ஊரை அழைக்குது சேவல் — முருகன்
பேரை முழக்குது சேவல்!
சாமி புறப்படும் நேரம் — வண்ணச்
சாத்தப் படியலங் காரம்! — சந்தத்
தமிழோசைநம் செவியூடுதெள்
அமுதாகவே குதிபாயுது
தாளைப் பிடித்திட வாரீர்! — கந்த
வேளைத் துதித்திட வாரீர்!