அண்ட மாமுக டுந்தகர்ந் தேவிழ
ஆயிரம் அம்புகள் எய்தான்-பதின்
ஆயிரம் மாயங்கள் செய்தான்-சூரன்
அன்ப னாகினன் கண்க ளுடனே
இன்ப மாநதி பொங்கி யேவர
என்பெ லாம்மெழு காகிய சேதிகள்
காவிய மாகவே சொல்வார்-அன்பர்
காலனை மோதியே வெல்வார்!
சங்க மேறிய சங்கர னாரையும்
சாடிய கீரனுன் அன்பன்-குறு
மாமுனி தானுமுன் அன்பன்-நல்லைக்
கந்த செந்தமிழ் கொண்டு தென்றலும்
வந்து வந்தும யங்கு மாலையில்
உன்பொ லாநினை வாலொரு பூங்கொடி
ஓவிய மாகவே நின்றாள்-மாரன்
தூவுகி றான்பாணம் என்றாள்!