முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
ஞானம் வரும்!10 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

ஞானம் வரும்!

10✓
மல்லிகை முல்லை மணங்கொள் கடம்பணி
மாலையான் — மலர் — மாலையான் — ஒளி
மஞ்சம், மயில், அன்பர், நெஞ்சம் கயிலாய
வாகனன் — பூத — வாகனன்
நல்லையின் வேலனைப் பாடவந் தால்வரும்
ஞானமே — மெய்ஞ் — ஞானமே — தன்னை
நம்பிய வானவர் வெஞ்சிறை நீக்கிய
நாயகன் — சேனை — நாயகன்
எல்லைகள் நாலும் விநாயகனே காவல்
ஏற்றுளான் — மகிழ்ந் — தேற்றுளான் — உறும்
எங்கள் துயரங்கள் சிந்தும்படி கந்தன்
ஏவுவான் — வேலை — ஏவுவான்!
சொல்லினை ஆள்வதில் வல்லவன் நாவலன்
தூயவன் — நெஞ்சம் — தூயவன் — அருந்
தொண்டுகள் ஆயிரம் கண்டநல் லூர்புகழ்
சொல்லவா? — இன்னும் — சொல்லவா?