வீதியெங்கும் வெண்மணற் பரப்பு-நீல
விதானம் அதில் நித்திலப் பதிப்பு
நாதசுர கானமெழும் வேதவொலி காதில் விழும்
நல்லைக்(கு)-இணை-இல்லை!
காதலொடு பாடுமொரு கூட்டம்-பூசை
காணவிரை யும்பிறிதோர் கூட்டம்-குல
மாதர்வய தானவர்கள் பாலர்இள வாலைகள்எம்
மருங்கும்-வந்து-நெருங்கும்!
நாவலனார் தொண்டுபற்றி ஆயும்-மா
நாடு நடக்கும், இருந்து கேளும்!
பாவலர்கள் பாடுதமிழ் பண்ணிசைவிற் பன்னர்தமிழ்
பருகு-நெஞ்சம்-உருகு!
காவல் எல்லை நாலினிலும் புரிவான்-எங்கள்
கணபதியே பெருமைகளுக் குரியான்
தேவர்முனி வோர்அரிய யோகியர்கள் கூடிஉண்மை
தெளிவார்-அருள்-பொழிவார்!