முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
சரிதானோ?3 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

சரிதானோ?

3✓
சங்கிலி ஆண்டதிந் நல்லூர்-செந்
தமிழர சோச்சிய தொல்லூர்-புகழ்
யமுனாரியும் அடியார்திரு
மடம்மாளிகை குளம்வீதிகள்
பலவும்-புகழ்-நிலவும்!
எங்கணும் நின்னருள் ஆட்சி-மயில்
என்பதும் வேலென்றும் பேச்சு-அரு(கு)
இருதேவியர் உளராகவும்
ஒருபாலனென் றுனையேசொல்லல்
ஏனோ-சரி-தானோ?
சங்கமும் கண்டது நல்லூர்-செந்
தமிழை வளர்த்ததும் நல்லூர்-புகழ்
சகராசனும் பரராசன்அ
ரைகேசரி முதலானவர்
தாமே-புலவர்-ஆமே!