முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
வெயிலுகந்த விநாயகா!1 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

வெயிலுகந்த விநாயகா!

1✓
மயிலை வள்ளி தெய்வ யானை
ஒயிலை முருகேசன் கையில்
அயிலைநல்லை ஊரைச்சிந்து பாட-கூடும்
அன்பர்தோளில் காவடியோ டாட
✓
வெயிலுகந்த பிள்ளையார்சந்
நிதியில்நின்று கைகளால்என்
தலையிற் குட்டிக் கும்பிடுவேன் நம்பி-கந்தன்
தந்திமுக னுக்கினிய தம்பி!
✓
அவலும் வன்னித் தேனும் பாலும்
சுவைகொள் மோதகம் கதலி வாழைப்
பழமும்எள்ளுப் பொரியும் கொண்டு போனேன்-சந்தம்
பயிலும் சிந்தில் கவிசெய்திடல் ஆனேன்!
✓
புவனம் யாவும் வலம்வந்தாலும்
சிவனும் தாயும் முழுதும் என்றான்
அவனைக் கண்டேன் நல்லையூரின் எல்லை-அந்த
ஆனைமுகன் போல்துணைவே றில்லை!