முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
பாவிலூறிய நாவினான்2 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

பாவிலூறிய நாவினான்

2✓
நிலவும் அரவும் கொன்றை மலரும் சடையில்அணி
நிமலர் அருளும்கந்த வேளையே-அன்பால்
நிதமும் பணிவர் எந்த வேளையும்-வெண்
நீறுபூசுவர் ஆறுமாமுகன் நீலமாமயில் ஏறுகோலமே
நினைவர் கசிந்துருகி ஆடுவார் - பாப்
புனைவர் இசைகலந்து பாடுவார்!
பலகூன் றுகளுவந்த முருகன் மறையை முன்பு
பரமன் செவியில்அருள் பாலனாம்-சூரன்
பணியும் குழந்தைவடி வேலனாம்-தமிழ்ப்
பாவிலூறிய நாவினான் என தாவியானவன் தேவிமாரொடு
பதியிற் சிறந்தநல்லை மேவினான்-என்
பனுவற் குகந்த பெரும் பேரினான்!