கோயில்மணி ஓசையிதோ வேளைதவ றாதுநம்மைக்
கூப்பிடுகு(து) அன்பரெலாங் கூடுவீர்-புகழ்ப்
பாக்களை இசையமைத்துப் பாடுவீர்
தீயுங்கொடுங் கோலும்சிறை வாழ்வும்பசி நோயுமென்ன
செய்யும்-வடிவேலைத்துணைக் கொண்டபின்-முரு
கையன் நல்லைக் கோயில்வலம் வந்தபின்?
தாய ரேந்து கின்றகருப் பூரதீப ஜோதிகாண
சஞ்சலங்கள் தூரஓடிப் போகுமே-நம்
நெஞ்சகங்கள் நின்றன் கோயி லாகுமே!
நேயமென்ற நெய்சொரிந்து வாய்மையாளர் செய்யும்பூசை
நித்த நித்தம் நிகழ்வதுநல் லூரிலே-பெருந்
தத்து வங்கள் காணலாம்நல் லூரிலே!