முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
வினை தீரப்பா பழநி வேலப்பா!8 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

வினை தீரப்பா பழநி வேலப்பா!

✓
நல்லை மாநகரை நண்ணு-வீதி
நாலும்ப்ர தக்ஷணம் பண்ணு!-முழு
நாளும் பொழுதும் கந்த வேளின் பெருமை சொல்ல
ஞானம்-வரும்-மோனம்!
செல்லப் பாவென்னும் ஞானி-தவம்
செய்த தேரடிக்குப் போநீ!-வினை
தீரப்பா பழநி வேலப்பா எனவே
சேவி-உய்யும்-ஆவி!
கண்கள் நீர்பெருக நில்லு-முரு
கையன் திருப்பெயர்கள் சொல்லு-அந்தக்
காலன் வந்தாலென்ன வேலின் துணையிருக்குக்
காணும்-அன்பு-பூணும்!
அன்னம் மயில் இடபம் மீதும்-கடா
ஆடு கிளி குதிரை மீதும்-எங்கள்
ஆறு முகந்தினமும் ஏறி வரும்பவனி
அழகு-நெஞ்சம்-இளகு