முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
தினைமாவும் சுனைநீரும் தெளிதேனும்...12 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

தினைமாவும் சுனைநீரும் தெளிதேனும்...

12✓
செந்தமிழ் இன்பம் நுகர்ந்து — வள்ளி
செவ்விதழ் ஈரம் பகிர்ந்து — தந்த
தினைமாவிலும் சுனைநீரிலும் தெளிதேனிலும் உளமாரவே
திளைக்கும் — உண்டு — களிக்கும்!
கந்தனின் வெற்றிகள் பேசும் — நல்லூர்க்
காற்றிலும் தமிழ்மணம் வீசும்! — பக்திக்
கவிபாடுவர் உரைகூறுவர் கலையாடுவர் வழிபாடுசெய்
காலம் — விழாக் — கோலம்!
சஞ்சலம் தீர்க்கும் மருந்து — தில்லைத்
தாண்டவன் தந்த மருந்து — திசை
தடுமாறியிவ் வுலகாகிய படுமாயையில் முழுகாதுதன்
தாளே — தந்த — வேளே!
பஞ்சமும் நோயும் பறக்கும் — இந்தப்
பாரில் அறங்கள் சிறக்கும் — இங்கு
படுபாதகர் செயும்வாதைகள் அடியோடறப் புரியாய்அருள்
பாலா — வடி — வேலா!