முருகன் App
நல்லூர் முருகன் காவடிச் சிந்து
சோ பத்மநாதன்
தமிழ்மணக்கும் பன்னிரண்டு தோளன்7 / 12
நல்லூர் முருகன் காவடிச் சிந்து · சோ பத்மநாதன்

தமிழ்மணக்கும் பன்னிரண்டு தோளன்

7✓
சேவலாம் கொடியும் மயில் நீலவா கனமுங்கொண்ட
தீரமிக்க கந்தன்அரு ளாளன்-நல்லூர்
ஆலயத்தைத் தேடிவந்த தாளன்-அவன்
வேலும் முகம் ஆறும்திரு நீறும்முது சூரன்குடி
வெற்றிகொண்ட தோள்வலியும் பாடு!-வினை
முற்றுமணு காதுபறந் தோடும்!
பாவலார் தொடுக்குந்தமிழ் மாலையே மணக்குந்திரள்
பன்னிரண்டு தோளன்முரு கேசன்-அவன்
என்னிரண்டு கண்களுக்குள் வாசன்-துதி
பாடுமன்ப ரோடுகலந் தாடுவதும் பாடுவதும்
பாவவினை போக்குமிது திண்ணம்-உனைத்
தேவனென ஆக்குமருள் வண்ணம்!