முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
பால்வாய்ப் பசுந்தமிழாற்2 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

பால்வாய்ப் பசுந்தமிழாற்

1வெண்பா✓
பால்வாய்ப் பசுந்தமிழாற் பாடிப் பரவிடுவன்
வேல்வாய் நிணமளையும் வித்தகனை - நூல்வாயிற்
றேடியுங் காணாவென் தெய்வக் கனிமகவை
நாடியிந்த நல்லூரில் நான்.
2கலித்துறை✓
நானென தென்னுமொர் மையலில் வீழ்ந்திழி நாயெனவே
மானம தின்றியிவ் வையக மீதினில் வாழ்ந்திடற்கே
ஏனெனை வைத்தனை ஏந்தெழிற் குஞ்சரி வள்ளியொடும்
வானமர் பேரிசை நல்லையில் வாழ்கின்ற மன்னவனே.