சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
காப்புப்பருவம்2 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
காப்புப்பருவம்
1திருமால்✓
சிவசமய மகுடநிகர் கனகசபை தனில்நடம்
செய்கின்ற புனிதன் முதலாம்
தில்லைமூ வாயிரவர் துதிகூறு முருகனைச்
சேவற் பதாகை யானை
நவமலி தமிழ்ப்புலமை முதிர்பாண்டி நாயகனை
நந்துலவு செந்தில் மேவி
நாகத்து ளார்இகல் கடிந்தோனை அகலாது
நாள்தொறும் காக்க என்றே;
புவனமுழு துண்டுமிழும் நெடுமாலை நீலப்
பொருப்பனைய நாலு திண்டோட்
புங்கவனை ஆழியொடு சங்கணி தடங்கையிற்
பொற்கசை பிடித்து நண்பன்
தவளமா வுறும்இரதம் நடவியவி னோதனைத்
தன்மாம னான கஞ்சன்
தலைகொய்து தாதைதன் தளைகொய்த கடவுளைத்
தழைகொய் திறைஞ்சு வோமே.
2சிவபிரான்
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்தனா தனதாந்த - தானனத் தாத்தனா✓
முத்தர்பல ரைக்கழைவ னத்தினில்ம யக்கவென
முத்துமா லிகைதாங்கும்-மாமுலைச் சோட்டொடோர்
முக்கியஉ றுப்பும்இல கக்கலைத விர்த்துவரும்
முற்றுமா மயில்போன்ற-மோகினிக் கேற்றகோன்
முச்சுடரெ னத்தெளிஞர் செப்பிடவி ளக்கமுறு
முக்கண்நா யகன்நேர்ந்த-நால்வரைப் பாட்டுமா
மொய்த்தஇத ழிப்பதம்உ றப்புரியு மெய்க்கடவுள்
முப்புரா தியர்சாம்பர்-ஆகிடத் தோற்றுசீர்
மைத்தடம லைச்சிலையு டைப்பரம ருத்திரன்முன்
மற்செய்வோர் கடுநீண்ட-தீயெனப் போய்க்கெடா
மத்தன்எனை ஒப்பவர்து திப்பதையும் வெற்(று)இறகு
வைத்ததே எனவாங்கி-மாலையிற் கோத்துளான்
வத்திரமெ னப்புலிஅ தட்கரிஅ தட்கொள்அரன்
மட்கிடா வளைதூங்கு-காதுடைப் போத்திநீர்
வற்றிலில்ம திச்சடிலன் ஒப்பில்சுன கச்சபையில்
வத்துவா னவன்ஆன்ற-தாள்களைப் போற்றுவாம்;
எத்தனைவி தத்தினில்வெ றுக்கினும்எ னைக்கவரும்
இச்சமே வியசேந்தன்-வாரியிற் போட்டநூல்
எப்படியும் இப்பிறவி யிற்பெறள னுட்கருதி
எய்க்குமா(று) உரையீந்த-வாயுடைத் தீர்க்கவான்.
எக்குறியும் முற்பகர்கு லத்தவர்வ ளர்த்தகிளி
இட்டவே லையிலேன்று-போம்எழிற் கீர்த்தியோன்
இக்குநிகர் சொற்பகரும் அத்திமகள் பொற்புமுலை
யிற்கொள்மால் வெளிதோன்றி-டாளதுளத்(து) ஆக்கும்வேள்
வித்தகர்த மக்கரசெ னத்திகழ்மு ழுப்புலவன்
வித்தையோர் இருநான்கும் ஞானமுற் றோர்க்கெலாம்
மெத்தஉத வத்தரும்ஒ ருத்தன்அகி லத்தவரும்
மெச்சுகோ மளமார்ந்த-தோள்களிற் சேர்ப்பதா
மெய்ப்பகுதி ருப்புகழ்ப டிப்பவர்த மக்கெளியன்
மிக்கவா ரியில்ஆழ்ந்த-சூரனைத் தாக்கியே
விட்புலம்அ ளித்தவன்எ னப்பகர்எ மக்கினிய
வெற்றிவேல் புனைபாண்டி-நாயகற் காக்கவே.
3உமாதேவியார்
தந்தனத் தனதாத்த தந்தனத் தனதாத்த
தந்தனத் தனதாத்த - தானனத் தாத்தனா✓
மந்திரப் பொருளாக்கம் என்றிருப் பவள்போற்றும்
வன்கவிக்(கு) அமுதாக்கினாள்பொற்பு மிக்குளாள்
வஞ்சகக் கொடி யோர்க்கு நஞ்செனத் தகுமூர்க்கம்
வந்தவர்க்(கு) இனிதாட்டு-பால்வைத்த செப்பினாள்
இந்திரச் சிலைமேற்கொள் சிந்துரப் பொடி வேர்க்க
என்பணிப் பரர்பார்க்க-ஆடச்ச லித்திடாள்
எஞ்சலற் றருள்ஊற்றும் அஞ்சனத் திருநோக்கி
எங்களுக்(கு) ஒருபாட்டி-தாள்பற்றி மெச்சுவேன்
வெந்திறற் சமண்மாற்ற வந்தசிற் பரமூர்த்தி
விஞ்சையிற் பொருள்காட்டும்-ஞானக்கு ருக்கள்ஓர்
விண்டுமுற் புகழ்கீர்த்தி கொண்டமற் புயன்வேற்கை
வென்றிவித் தகன் ஆர்க்கும்-மேலுற்று நிற்கும்வேள்
சந்தியிற் கரிவேட்கை மிஞ்சுபிற் றுணைபூத்த
தண்பொழிற் புலியூர்க்குள்-வாழ்சித் தர் பெற்றசேய்
சஞ்சலப் பிணிதீர்க்கும் என்றிருப் பவர்வாழ்த்து
சந்தமுத் தமிழ்நாட்டு-வேளைப்பு ரக்கவே.
4விநாயகர்
தாந்தனா தனதான தய்யனத் தாத்தனா✓
வேண்டல்போல் ஒளிர்ஞான வல்லவைக்(கு) ஆக்கமாம்
வேந்தைமா மதமேவு கையனைக் கீர்த்திபோல்
நீண்டகோ புரமீது தில்லையிற் றோற்றலார்
நேர்ந்துளார் வினைசாடும் மெய்யனைப் போற்றுவாம்
மாண்டசா ரணர்தாமும் வைத்துரச் சேட்டையே
வாய்ந்ததோ(டு) அடம்ஆண்மைபொய் அரக்(கு)ஏற்றுவாழ்
பாண்டர்வே ரறுமாறு செய்தருட் காட்டுமோர்
பாண்டிநா யகனாம்எம் ஐயனைக் காக்கவே.
5நவக்கோள்
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன தத்தனா✓
வெங்கதிர்நெ ருங்குவத னந்திகழ்நெ டும்பகலை
வெண்சுடரை அங்கிநிக ருங்குசனை மிக்கநூல்
வென்றிமரு வும்புதனை அண்டர்பர வுங்குருவை
விஞ்சையுணர் ஒண்புகரை அண்டினர்த மக்கொலா(து)
எங்கணும்நி றைந்ததனை, நம்பல்உத வுஞ்சனியை
எஞ்சலில்வி டம்பொழியும் அங்கதம்இ ரட்டையோ(டு)
இன்புறவி ரும்பியெழில் விஞ்சுகுளி கன்றனையும்
எந்திரம்வ ரைந்(து)அதில் அமைந்தொளிர மெச்சுவேன்
மங்களமி குந்ததொரு குஞ்சரியு டன்குறவர்
மங்கையுண ருங்கணவன், அன்பரைவெ றுத்திடான்
மஞ்சுதுவ ருங்கனக மன்றில்நட னம்புரிய
வந்தவர்த ருங்குழவி குன்றுதொறும் உற்றவேள்
கொங்கவிழ்க டம்புகுர வம்குவளை தங்குகணி,
குஞ்சரமு கன்றுணைவன் இந்திரர்து திக்கும்வேல்
கொண்டவய வன்சிகிஇ வர்ந்துமுரு கன்தமிழர்
கும்பிடம கிழ்ந்துலவு கந்தனை அளிக்கவே.
6கலைமகள்
தனன தானன, தனன தானன தனன, தானன, தத்தனா✓
கலப மாமயில்அழலை நேர்தகர் கவள மால்களி(று) உற்றவேள்
கருணை வாரிதிநெடிய வேல்புனைகரன்ம காரதர் சுற்றுசேய்
உலகெ லாமுணர் சபையு ளான்உமை உரிமை யான்நடு வைக்கவாழ்
ஒருவ னாகிய செழியர் நாயகன்உவகை மேலிட நித்தமே
அலகி லாமறை பகரும் வாயினள் அதர வூறல்அ ளிப்பத்தால்
அகில மானிடர் சிலரும் வானவர் அனைய ராகஇ யற்றுவாள்,
சலச ஆதன புனித பாரதிதமியன் நாடொரு
சொற்சொனாள்
சரச கோமள மதுரசகர தவள வாணிபு ரக்கவே.
7இலக்குமி
தனத் தனத்தந் தனத் தனத்தந் தனத் தனத்தந் தானனா✓
திருட் டரக்கன் கடற் குளித்தும் சினத் தெதிர்க்கும் போதிலே
திறற் புயத்தொன்(று) அயிற் செலுத்தும் திருக் கரத்தன் தீதுறா
அருட் சபைச்சங் கரற் குவப்பன்(று) அளித் தமுத்தன் தேவர்கோன்
அடத் தினைக்கொண் டிடப் பொறுத்தங்(கு) அதற் குமெச்சந் தாரன்மேல்
இருட் குழற்பொன் பொருட் களிப்(பு)அன் பினர்க்
குறத்தன் பார்வையால்
இசைத்(து) எழிற்பங் கயத் தினிற்றங்(கு) இலக்
குமிப்பெண் கோதிலாள்
உருட் டுவட்டம் தொனித் தநத்தென்(று) உரைப்
பவைக்(கு)அன் பாகுமால்
உரத் தணைக்குந் துணைத் தனத்(து)இங் கொருத்
திநித்தம் காவலே.
8பலதேவர்
தனதன தத்தன தனதன தத்தன தானன தந்தனனா✓
அலகில்பு கழ்ச்சிகொள் முனிவரர் சொற்படி ஆரந றுங்கனிபால்
அமுதுநெய் சர்க்கரை அனையவை இட்டுயர் ஆர்வமு டன்தினமே
திலமள விற்கொலை முதலிய(து) அற்றவர் சேகரம் அன்புறவே
திரிபுவ னத்தினில் மருவிய பற்பல தேவரை யுந்தொழுவாம்
நலமுறு முத்தமிழ் மலியவ ளர்த்தவர் நாயக மென்றொளிர்கோன்
நறைமலி செச்சைகொள் வனசரன் விப்பிரர் நான்மறை யும்புகழ்வேள்
கலகமி கப்புரி சமணொழி யப்பொரு காளைக டம்பனிசேய்
கனகச பைச்சிவன் மதலையு வப்புறு காவல்பு ரிந்திடவே.
9சமயச் சின்னம்✓
வெண்டா மரையாள் செவிகவர விரும்பும் பலநூல் விரிப்போனை
வேதன் கதறப் புனைத்தானை விளங்கும் சேவற் கொடியானைத்
தண்டா யுதமும் வடிவேலும் தாங்குங் கரத்துப் பெருமானைத்
தகைசேர் புலியூர் தனைவிரும்பும் தமிழ்நாட் டரசைத் தினம்காக்க
கண்டார் வணங்கத் திகழ்காவிக் கலையைச் சமணர் கழுஏறக்
கமழ்வெண் பொடியைச் சிவனார்தம் கண்ணின் மணியைப் பெரிதேத்தி
வண்டார் துளவன் திருநாமம், மலைக்கோன் மகள்சிந் துரம்முதலாம்
வகையைப் புகழ்ந்து பெரியோர்தாள் மலரின் துகளை வழுத்துதுமே.
10பொதுத் தெய்வம்
தானனத் தானதானன தானனத் தானதானன
தானனத் தானதானன தன்னனத் தாத்தனா✓
வேதவித் தாயபூரணம் யோகியர்க் கானசாதனம்,
வேற்றக் கூடும்ஞானிகள் உண்மையிற் றேக்குதேன்
வீடெனப் பேசுகோவிலில் வாழ்வ(து)எட் டாததாரகம்
வீறுடைப் பாலர்நாடொறும் உன்னலிற் காட்டுசீர்
மேன்மையுற் றோர்கள் சேர்தரும் நால்வகைப் பூமியோடொரு
வேம்அழற் பாலைமீதினும் நண்ணுதற் கேற்றகோ
மேலவர்க்(கு) ஈறுதோய்தரு போ(ரு)டைத் தீரராகிய
வீரரைக் கோபியாதது பன்மதத் தார்கெடா(து)
ஓதலிற் றோணொணாதது வாய்மையிற் சாருமாதவர்
ஊழ்கெடச் சாடுபேரருள் விண்முகிற் கூட்டும்நீர்
ஓதம்வற் றாதுமீறல்உ றா(து)அடக் காண்மை கூர்பொருள்
ஊர்சுடர்க்(கு) ஆயிபோல்வது பொன்னதைப் போற்றிவாழ்
ஊரவர்க்(கு) ஆவியாம்மட மாதர்பொய்ப் போகமால் கெடும்
ஒகைமிக் கீயு(ம்)மாகுரு என்னநந் தார்க்கெலாம்
ஊறுறிற் பேசிடாதது, மாய்வில் சத் தாதியாமினிர்
ஓர்பொதுத் தேவே னாநிதம் எண்ணிமிக் கேத்துவாம்.
வாதமிட் டேமுனாள்எதிர் சாரணர்க்(கு) ஏமனானவன்,
வாரியிற் சூரர்மாய்வுற மின்னயிற் றூக்கியே
வானகத் தேவர்கோன்முடி சூடிமுற் போலநாடொறும்
வாழவைத் தோன், மகாரதர் பன்னுமெய்க் கீர்த்தியோன்.
மாவலிக் காகஓர்குற ளாய் இரப் போனும் ஆகிய
மாயனுக் கானதோர்மரு கன்,முழுத் தீர்க்கவான்,
வாரணக் கேதனாதிபன் மோகனக் கோமளாகரன்
மானெனப் பார்வைசேர்எம(து)அன்னையர்க்(கு) ஆக்கவான்
ஏதமற் றோர்கள்சூழ்புலி யூரில்உற்(று) ஆடுவார்மக
வேயெனக் கூறுவாரையும், அன்னவர்க் காற்றலால்
ஈறில்சொற் பேசுதேசிக னேயெனப் பேணுவாரையும்,
யாவர்சொற் போலும்வாழ்பெரு வண்மையைப் பாக்களால்
யாமெனப் பாடுவாரையும், நாடும்உற் சாகன், மாமயில்
ஏறும்வித் தாரவேள், மலை மன்னன்மற் றோட்களால்
ஈடில்சொற் சேரவாழ்வுறு பூழியக் கோடிநாயகன்
ஏதிலர்க்(கு) ஏறதாவளர் அண்ணலைக் காக்கவே.