உழவர் அவிழ்த்த பகட்டினங்கள்
உவகை மிகலால், குதித்தோடி,
ஓரா யிரம்நெட் டிதழ்விரிக்கும்
உயர்பூந் தடத்திற் புகுந்துழக்கி,
கழகம் அனைய வளைக்கூட்டம்
கதறத் திரும்பிப், பெருவேலி
கடந்து கருப்பஞ் சோலையிற்போய்க்
கணுமுத் துமிழ்ந்து, களித்தருந்திப்,
பழகும் தொழுவைக் கருதிவரும்
பான்மை தவிராப் புலியூரில்
பரமன் மகிழ, அவண்மனைதன்
பருகா முலையிற் பால்சுரக்கக்,
குழவி எனவந் தருள்குமரா!
கொட்டி யருளாய் சப்பாணி
குறைதீர் பாண்டி நாயகனே!
கொட்டி யருளாய் சப்பாணி.