முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
பாயிரம்1 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

பாயிரம்

கற்பக விநாயகர் துதி காப்பு-வெண்பா✓
வெள்ளைக் கவிகை மிளிர்பாண்டி நாயகன்மேற்
பிள்ளைக் கவிப்பனுவல் பேசுவேன்—வள்ளைபடர்
மாபுரத்துட் சீரியதாம் வண்மையுறு தில்லைநகர்க்
கோபுரத்துக் கற்பகங்காக் கும்.
கலைமகள் துதி✓
தில்லைமூ வாயிரரும் செந்தில்ஈ ராயிரரும்
நல்லையெனச் சொல்பாண்டி நாயகன்மேல்—வல்லையொரு
பிள்ளைக் கவிப்பனுவல் பேசுதுணை யாரென்றால்
வெள்ளைக் கலையுடைய மின்.