சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிற்றிற்பருவம்9 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிற்றிற்பருவம்
71சிறுவீடு கட்டி விளையாடும் சிறுமியரிடம்
முருகன் செய்யும் விளையாட்டு✓
மயில்வா கனத்துப் பெருமாளே!
மறைமேல் நடிக்கும் மலர்த்தாளா!
மழைசூழ் குறிஞ்சிக்(கு) இனியோனே
வலிசேர் தகுவர் குலகலகா
எயில்மூன்(று) எரித்துக் கனகசபை
இடத்தில் நடிப்போன் தரும்புதல்வா!
இமயப் பிடிதன் முலைபருகும்
எழில்வா யுடைய முருகோனே!
குயில்நேர் குறத்தி மணவாளா!
கோலே யனைய விழியிமையாக்
கொடிதன் ஊடற்(கு) உளம் உருகும்
கோலா கலச்சண் முக!முருகா!
அயில்வேற் குமர குருபரனாம்
அரசே! சிற்றில் அழியேலே
அருட்சீர்ப் பாண்டி நாயகனே!
அடியேம் சிற்றில் அழியேலே.
72✓
சத்தி வடிவேற் படையெடுத்துத்
தகர்மீ தேறிச் சமராடித்,
தகுவர் குலமும் திருநீற்றைத்
தன்வோர் குலமும் அறக்களைந்து,
பத்தி யுடையார் களிகூரப்
பவனி வருவாய்! மயிலேறிப்
பாரும் கடலும் பலமலையும்
பரிந்து திரிவாய்! களிறூர்ந்து
சித்தி விரும்பும் அவர்பாலும்
திரும்பா வீடு பெறநாடும்
திறத்தோர் பாலும், தினந்தோறும்
செல்வாய்! இணைதீர் சிவகுருவே!
அத்தி மகள்கண் களிகூரும்
அழகா! சிற்றில் அழியேலே
அருட்சீர்ப் பாண்டி நாயகனே!
அடியேம் சிற்றில் அழியேலே.
73✓
எம்போல் நீயும் ஒருகுழவி
எனச்சொன் னேமா? நீகளிப்புற்(று)
யானும் உம்மோ(டு) இருப்பேன்என்(று)
இயம்பும் காலை இசைந்திலமா?
நம்போல் வருந்தான் இவன்வேறு
நாம்வே(று) எனல்போற் பலவாறு
நவின்று மணந்து மணற்சோற்றை
நல்கா தருந்தித் துயின்றேமா?
வம்போ வழக்கோ எனக்கூறி
வாதா டினமா? யாங்கள்பகர்
மழலை மொழியிற் சிறிதிரக்கம்
வைத்தால் மகிமை குறைவாமா?
அம்போ ருகத்தாட் குருபரனே!
அணிசேர் சிற்றில் அழியேலே
அருட்சீர்ப் பாண்டி நாயகனே!
அடியேம் சிற்றில் அழியேலே.
74✓
பானா றியவாய்ச் சிறியேமும்
பகிர்ந்து சிலர்தாம் முச்சிலினால்
பரிந்து கொழித்த மணல்பாராய்!
பதுமம் அனைய கரம்நோவத்
தானா வருந்தி நிலம்பெருக்கும்
தயக்கம் பாராய்! நுதல்வெயர்க்கும்
தளர்ச்சி பாராய்! சிலர்ஏங்கித்
தவித்தல் பாராய்! தனித்தனியே
நானா விதமாய்ச் சமைத்(து)ஒழித்து
நன்றாய் அமைத்த எழில்பாராய்!
நாங்கள் உனது மொழிப்படியே
நடப்போம், இருந்து விளையாடாய்!
ஆனா அமுதே! மயிலேறும்
அமலா! சிற்றில் அழியேலே
அருட்சீர்ப் பாண்டி நாயகனே!
அடியேம் சிற்றில் அழியேலே.
75✓
ஒருசட் சமய நெறிதோறும்
ஒவ்வோர் முகமே உயர்வெனக்கொண்(டு)
உழன்ற நலத்தால் ஆறுமுகம்
உடைய பரம்ஒன் றெனத்தேரும்
பெருமைக் குரியார் சிரஞ்சூடும்
பிரச மலர்த்தாள் வருந்தாதோ?
பிழைதீர் கனக சபையுடைய
பெருமான் உரமும், உமைமடியும்,
கருணைத் திருமால் முதலாய
கடவு ளார்தம் அவிர்முடியும்
கழலிற் றுகள்போய்ப் படியாதோ?
கடையேம் மனம்நொந் தயரேமோ?
அருமைப் புலவர் விருப்பமெலாம்
அருள்வாய்! சிற்றில் அழியேலே
அருட்சீர்ப் பாண்டி நாயகனே!
அடியேம் சிற்றில் அழியேலே.
வேறு✓
உகளும்விளை முத்தமும், தையலார் மேடைதொறும்
உரிமைமிகு கணவர் தம்மால்
ஊடிஎறி யும்பணிக் குவையும்,விலை மகளிர்முலை
ஒழுக விடுகத் தூரியும்,
பகடுசொரி மும்மதச் சேறு(ம்)மூ வாயிரவர்,
பலகோடி முனிவர், புலவோர்,
பாதமல ரிற்குலவு மகரந்த மும்,தினம்
பழகுமறு குடைய தில்லை
நகர்நடுவி னிற்கனக சபையில்நட னம்புரியும்
நம்பனருள் கொண்டு முன்னாள்
நான்மறைக ளும்பொருவில் ஆகமங்க ளும்மொழியும்
நற்பவள வாய்,கண், முத்தத்
திகழும்இரு தாள்களால் சிறியரேம் செய்ததொரு
சிற்றிற் சிதைத்தி டேலே
செங்கண்மால் மருகனே! தென்பாண்டி நாயகா!
சிற்றிற் சிதைத்தி டேலே.
77தேன்வரும் இடமும், தில்லையில்வரும் ஓசையும்✓
முல்லைநகை மெல்லியர்கள் குழலெனத் திகழ்பொழிலில்
முகிழ்மலர் உகுத்த தேனும்,
முடகுடக் கனிவெடித் துச்சொரிந் திடுதேனும்,
முதிர்தென்னை அனைய வாழைக்
கொல்லையிற் கனிகசிந்(து) ஒழுகுதே னும்,பெருகு
குவளையும் கமல மலரும்
கூடிய தடம்பொய்கை தருதேனும், நெட்(டு)இறால்
கொப்பளிக் கின்ற தேனும்,
தொல்லைமா நதிஎனக் கடல்வயிறு கிழிவுறத்
தோயும்வளம் ஆர்ந்து விண்ணோர்
தொழும்ஓதை யும்கழலில் எழும்ஓதை யும்கவிஞர்
துதிஓ தையும் குலாவும்
தில்லைநட ராசனருள் சிறுமைந்த னே!எமது
சிற்றிற் சிதைத்தி டேலே
செங்கண்மால் மருகனே! தென்பாண்டி நாயகா!
சிற்றிற் சிதைத்தி டேலே.
78வேறு
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தத் தனதானா✓
வெட்டும ருப்புறு மைக்கட விற்சமன் வெப்புற் றிகழாதே
மெத்தவும் நித்திரை யுட்கன விற்பகர் மெய்ச்சொற் றவிராதே
எட்டுவ கைத்திசை யுற்றம னுத்திரள் எய்த்துத் தவியாதே
எட்டியெ னத்தகு துட்டர்க ளிப்புடன் எற்றித் திரியாதே
கொட்டுமி ழற்றிஅ ருச்சனை யிட்டுயர் கொற்றத தனிவேலா
குற்றம றுப்பதெ னப்பகர் சர்ச்சனர் கொக்கிற் குறுகாதே
திட்டுத மிழ்க்கும்அ ருட்புரி வித்தக சிற்றிற் சிதையேலே
சிற்சபை யிற்சிவன் முற்றரு தற்பர சிற்றிற் சிதையேலே.
79✓
கொச்சைமொ ழிக்கவி யைப்புகழ் அற்பர்கை கொட்டித் திரியாதே
குக்கலை யொத்த விடக்கின ருக்குள கொட்டிற் றழையாதே
பிச்சையி டத்தகும் நற்றொழில் கைத்திடு பெட்புப் பெருகாதே
பிற்பிற விக்கயர் வுற்றம தத்தினர் பித்துப் படராதே
பச்சைம யிற்பரி யைப்புகழ் விற்பனர் பக்கத் துணையாவாய்
பற்றல ரைக்களை சத்தி வயப்படை பற்றித் திகழ்சேயே
செச்சைம லர்ப்பொரு முத்தமிழ் கற்பவர் சிற்றிற் சிதையேலே
சிற்சபை யிற்சிவன் முற்றரு தற்பர சிற்றிற் சிதையேலே.
80வேறு
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன தானா✓
சிக்கலுறு முத்தமிழ்தி ருத்தமது ரைக்குளொரு
செட்டிமனை யுற்றகுக! சிற்றில்அழி யேலே
செப்பெனுமு லைக்குரிய பத்தினிக ளுக்குரிய
சித்திரமொ ழிக்குமர! சிற்றில்அழி யேலே,
செக்கரில்உ றுப்பமைவ துற்றிலகு பொற்பும்அலர்
செச்சையு முடைப்புனித! சிற்றில்அழி யேலே
சிட்டர்பல ருக்கும்அவர் நிச்சயமெ னக்குலவு
சித்துறுத னிக்குரவ! சிற்றில்அழி யேலே
திக்கடைய வெற்றிகொள்வி றற்பெறுத யித்தியர்கள்
செத்தொழிய விட்டபுய! சிற்றில்அழி யேலே
தித்தியொடு மத்தளமு முக்கநட மிட்டசிவ
சித்தர்விழி பெற்றசுத! சிற்றில்அழி யேலே
தெக்கணமி ருப்பவனும் அச்சமொடு மெச்சவளர்
செற்றஅயில் பற்றுகர! சிற்றில்அழி யேலே
செப்பரிய நட்புறுதி ருப்புகழ்ப டிப்பவர்கள்
சித்தமறி பொற்சரண! சிற்றில்அழி யேலே.