முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
தாலப்பருவம்4 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

தாலப்பருவம்

21✓
கங்கை குலுங்கச் சடைதுவளக்,
கனக சபையில் நடிப்போனும்,
கரிய குயில்போல் அருகில்நிற்கும்
கருணைக் கொடியும் களிகூர்ந்து
செங்கை மலரைப் பதமலரைச்
சென்னிக்(கு) அணிந்து, விழிமலரில்
சேர்த்து, முகர்ந்து, முத்தமிடும்
செல்வக் குமரா! தினைப்புனத்து
மங்கைப் பருவக் குறத்திமனம்
மகிழும் கணவா! மகவான்தன்
மகளுக் கினிய மணவாளா!
வடிவேற் குகனே! வழிபடுவோர்
சங்கை தவிர்க்கும் குருபரனே!
தாலோ தாலோ தாலேலோ
தமிழ்சேர் பாண்டி நாயகனே!
தாலோ தாலோ தாலேலோ.
22✓
சிந்திற் றவமும் அலைக்கூட்டம்
திகழ்மா மணியைத் தினமெறியும்
திருச்செந்தூரில் தன்னனைய
தெளிந்த மறையோர் பணிகொண்டு
கந்திப் பொதும்பர் சூழ்புலியூர்
கனக சபையில், தாதைநிகர்
கல்விக் கடலாம் அந்தணர்தம்
கரம்கூப் பிடக்கண்(டு) உளம்களித்து
வந்திப் பவர்க்கும், எழுத்தாறும்
மனத்துட் கருதும் மாதவர்க்கும்,
வரம்சந் தருளச் சலியாது
வளரும் குமர குருபரனே!
தந்திக்(கு) இளைய முருகோனே!
தாலோ தாலோ தாலேலோ .
தமிழ்சேர் பாண்டி நாயகனே!
தாலோ தாலோ தாலேலோ.
23✓
அத்தி முகவன், கனகசபை
அதனில் ஆடும் அருட்பெருமான்
அளவில் உயிர்க்கும் தாயானாள்,
அரவிற் றுயிலும் நெடுமாலோன்,
புத்தி யுடையோர் உணர்ந்துபணி
புனிதக் குரவன், அருக்கன்,எனப்
போற்றும் சமயம் ஓராறும்
பொருந்து முகங்கள் உடையோனே!
பத்தி நெறியோர்க்(கு) எளியோனே!
பழியும் புலையும் பெருக்குகின்ற
படிற்றுச் சமயத் தினர்காணப்
பகைவேர் அறுத்துத் திரும்பிவரும்
சக்தி வடிவேற் பெருமானே!
தாலோ தாலோ தாலேலோ
தமிழ்சேர் பாண்டி நாயகனே!
தாலோ தாலோ தாலேலோ.
24✓
வன்பேய் அனைய பிடகரையும்
வணக்கும் பெருமைப் புலியூரில்
வரத னாரும், சிவகாம
வல்லி யாரும், மகிழ்புதல்வா!
பொன்பே ணியசீர்க் குறிஞ்சிதொறும்
பொருந்தும் திருத்தாட் பெருமானே!
பூதர் மனம்போற் சமராடும்
புனிதக் குகனே! பொறைக்கடலே!
முன்பே மயில்மேல் வரவேண்டும்
முழுநீற் றினரை முனியாத
முருக வேளே! முகந்தோறும்
முக்கண் உடையோய்! முறைப்படியே
தன்பேர் உரைப்பார்க்(கு) எளியோனே!
தாலோ தாலோ தாலேலோ
தமிழ்சேர் பாண்டி நாயகனே!
தாலோ தாலோ தாலேலோ.
25சோலைவளம்✓
வலியோர் புகழ்போல் மிகநீண்ட
வளஞ்சேர் பொழிலில் குரக்கினங்கள்
வாழைக் கனியும் மாங்கனியும்
வயிற்றுக்(கு) அருந்தி, மனக்களிப்பால்
மலிவார் பலாவில் வெடித்தகனி
வகிர்ந்து சுளையில் சிறிதடக்கி,
மற்றச் சுளையை எடுத்தெறிந்து,
மருவித் திரிந்து, களிறார்க்கும்
ஒலிகேட்(டு) இடியென்(று) உளம்பதறி,
உயரும் பூகத்(து) அகல்பாளை
உட்போய் ஒதுங்கும் புலியூரில்
ஒளிரும் கனக சபைநடுவில்
சலியா தாடும் அரன்புதல்வா!
தாலோ தாலோ தாலேலோ
தமிழ்சேர் பாண்டி நாயகனே!
தாலோ தாலோ தாலேலோ.
26வேறு தந்தன தந்தன தனனா தானா தானானா✓
வெங்கண்ம டந்தையர் விழைவால் எளியேன் வீணே மாயாதே
வெண்கொடி இன்புறும் விதிநூல் முழுதோர் மேலோர் தாழாதே
பங்கய மின்,பல பழிசேர் கொடியோர் பாலே வாழாதே
பங்கமில் உன்துதி பகர்வார் கொளுமால் பாழே போகாதே
செங்கன கங்கொடு திகழோர் சபேசர் சீரார் மாளாதார்
சிந்தையில் நின்றொளிர் சிவனார் எழிலர் சேணூர் வானோர்தாழ்
ங்கரர் முன்பரி தவமாம் முருகா! தாலோ தாலேலோ
தண்டமிழ் கொண்டவர் தனிநா யகனே! தாலோ தாலேலோ.
27✓
கஞ்சமெ னுங்கொடி கமழ்தாள் நினைவார் காசால் வாடாதே
கங்குல்பொ ருங்குடை கவியா தொழிசீர் காணா தாயாதே
நெஞ்சறி யும்பெரு நெறியோர் புலையோர் நீரால் மாயாதே
நிந்தையெ னும்பிழை நிறைவார் இலர்பால் நீள்வா தாடாதே
மஞ்சட ரும்பொழில் மலிவார் புலியூர் வாழ்வா னார்பாலா
வண்டரு டம்பினை வகிர்கூர் மிகும்ஓர் வார்வேல் சேர்தோளா
தஞ்சம்வி ரும்புணர் தமையாள் குகனே! தாலோ தாலேலோ
தண்டமிழ் கொண்டவர் தனிநா யகனே! தாலோ தாலேலோ.
28வேறு✓
கொண்டல் பொழிந்திடல் குறைவா கிடுமோர் கோ(து)ஊர் தோயாதே
கொன்றவை தின்றிடு கொடியோர் களிகூர் கோலூ டாடாதே
மண்டல மெங்கும்நெல் மலிவார் விளைசீர் மாறாதே வாளால்
வம்பர்உ டம்பரி வயமே வியகோன் வாழ்(வு)ஊ றாகாதே
தெண்டனி டுந்தவர் சிரமீ தவிர்தாள் சேர்சே யாம்வேளே
சிங்கமு கம்பெறு திருமால் மருகா! தீநேர் வேலோனே!
சண்டனை வென்றுயர் சபையார் மகனே! தாலோ தாலேலோ
தண்டமிழ் கொண்டவர் தமிழ்நா யகனே தாலோ தாலேலோ.
✓
@todo missing stanza between 29 to 35, page 4360 to 4363 of source.