முருகன் App
சுப்பிரமணியர் விருத்தம்
அற்புத மிகப்புகழ்8 / 12
சுப்பிரமணியர் விருத்தம்

அற்புத மிகப்புகழ்

8பதினான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
அற்புத மிகப்புகழ் திருப்புகழ் விருப்பொடுசொல்
அருணகிரி தனையு கந்தாய்
அம்புவியி லின்பமுறு கும்பமுனி முன்பிவர
அன்புருகு பண்பு ரைத்தாய்
உற்பன அரக்கன்நெடு சர்ப்பன மனப்பயம்
உடற்றநக் கீர னொருநாள்
உன்சலுகை தஞ்சமென நெஞ்சுருவ வஞ்சகிர
வுஞ்சநேர் கிரிபி ளந்தாய்
எப்படியு முற்படு வினைப்பய னுலப்புமதை
இப்புவியி லேம றுப்பாய்
ஈதுகலி காலமென்று எண்ணவொண் ணாதுநான்
ஏழையடி யேனர் கையால்
தற்பர தயாபர மனோரத மகிழ்ந்துதவு
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.