நாரதப் பிரமாதி அமரர்கின் னரருரகர்
நாரணன் முதற்பண் ணவர்
நடுக்கம் பொருந்திய இடுக்கண் களைந்திட
நடக்கும் குழந்தை வயதில்
சூரபத் மாசுரன் கயமுகன் தாருகன்
துன்முகன் பானு கோபன்
துட்டகிர வுஞ்சக்ர வுஞ்சா சுரன்சிங்கன்
சுற்றிய அரக்க ரையெலாம்
கோரசங் காரண தூளிபட லங்கொண்டு
கூறாடி உனது வெற்றிக்
கொடியேற இந்திரன் முடியேற வானாடு
குடியேற வைத்த துரையே
தாரணியின் மேவுபரி பூரணவுல் லாசனே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.