கண்ணேறு வாராது பிணியொன்று சேராது
கவலைப்ப டாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது
விண்ணேறு மணுகாது கன்மவினை தொடராது
விஷமச் சுரம் வராது
வெய்யபூ தம்பில்லி வஞ்சனைகள் தொடரா
விஷம்பரவு செந்து மடரா
எண்ணேறு சனனங்கள் கிடையாது காலபயம்
எள்ளளவு மேயி ராதுஇவ்
ஏழைக் கிரங்கியருள் தெய்வமுனை யல்லாமல்
இன்னமொரு தெய்வ முளதோ
தண்ணேறு கங்கைமலை மங்கைஅருள் தெய்வமே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.