முருகன் App
சுப்பிரமணியர் விருத்தம்
துன்னுகயி லாயகிரி3 / 12
சுப்பிரமணியர் விருத்தம்

துன்னுகயி லாயகிரி

3பதினான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
துன்னுகயி லாயகிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலை மலைவான்
சோலைமலை மேவியவி ராலிமலை மன்னிய
சுவாமிமலை யுஞ்சி றந்த
சென்னிமலை வேளூர் கடம்பமலை மேலவயல்
திருவருணை யின்கோ புரம்
திருவாவி னன்குடி பரங்கிரி திருத்தணிகை
சிவாலயம் திருவே ரகம்
இன்னில மதிக்குந் திருச்செந்தில் முதலான
எண்ணப்ப டாத கோடி
எத்தலமும் நின்கருணை வைத்துவிளை யாடல்விதம்
எத்தனை எனச்சொல் லுவேன்
தன்னைநிக ரொவ்வாத பன்னிருகை வேலனே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.