சீலமிக தற்பரனை யுன்னித்த தேகத்
தியானத் தெழுந்து பொங்கிச்
சில்லென்று மெய்மறந் தானந்த மவுனம்
செனிக்கக் குவிந்து கண்ணீர்
ஆவிபொழியக் கருணை யுள்ளங் கனிந்துருக
அன்புருக என்புரு கவே
அங்கங் குழைந்துபுள கிக்கநின் றுருகுவார்
அப்படியும் ஒன்றறிவ னோ
காலங் கழித்துண்டு வீணுக் கலைந்துபல
காலப்ர பஞ்ச மாயக்
கடற்குட் படிந்தே கிடக்கின்ற பாசம்
கடக்கும் படிக்கருளு வாய்
தாலமுது கண்டுநிலை கண்டகோ தண்டமால்
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.