மாமேவு நவரத்ன கேயூர மணிமகுடம்
மன்னிப் பொலிந்த முடியும்
வச்சிர நுதல்திலக வெண்ணீறும் ஓராறு
வதனவிம் பத்தின் அழகும்
பாமேவு பத்தர்க்கு மடைதிறந் தன்பொழுகு
பன்னிரு விழிக் கருணையும்
பகரரிய பழமறை பழுத்தொழுகு சிறுநகைப்
பவளம் சிறந்த வாயும்
காமேவு கரகமல பந்தியும் சேவலும்
கனகமயி லுங்கிண் கிணிக்
காலுமுந் நூலும்வடி வேலுமென் மேலுமெக்
காலுந் துலங்க வருவாய்
தாமோத ரானந்த கோவிந்த வைகுந்த
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுருவாய் வந்த
சரவணப வானந்தனே.