தூயபொறி ஐந்தையும் அடக்கிபுல னாதிகள்
சுழல்கின்ற வழிம றித்துச்
சுழிமுனை திறந்துமூ லாதார மேலாந்
துவாதாசந் தத்தை மூட்டி
வாயுவை யுருக்கிப் பெலத்துவரு குண்டலியை
வவ்விமேற் கொண்டெ டுத்து
வாசியை நடத்தியவ் வோசையைத் தாவென்று
வழிகொண்டு நாத வெளியில்
தோயும் பரப்பிரம் பூரண விலாசமது
சோதிப்ப தென்ன எளிதோ
தொலையாது நிலையாத தாகையால் உன்பதந்
துணையே துணைப்பற் றினேன்
தாயகம னோகர மயூரவா கனமுருக
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.