தீராத மாயச் சுகந்தந் தவிக்கநஞ்
செனனம் செழித்த பின்பு
செகதல மயக்கமதி லேயென் குடித்தனம்
தீய மருமோர் வங்கணம்
போராடு சமுசார பாசபந் தம்மிதிற்
போகமட வாரி ணக்கம்
பொறிவா யலைக்குமீ துள்ளபடி முன்வினைப்
போகந் தொடர்ந்த நெறியால்
ஆராலு முடிவுறா தானா லிதற்குநல்
அறிவென்ற தீப மொன்றுண்(டு)
அவ்வழியி லேமனஞ் செல்லாமல் அலைகின்ற
அடியேனை ஆட்கொள் ளுவாய்
தாரேறு பன்னிரு புயாசலக் கடவுளே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.