தருகாம மோகமுறு திமிதிமிங் கலமிக்க
தனலோப வன்மு தலையாம்
தற்கோப வல்வடவை மூடத்துவம் பரவி
சஞ்சல மெனுந்த ரங்கம்
அரியவெனில் ஒருகுமிழி அஞ்ஞான வாரிதியில்
அலைகின்ற சீவ ராசி
அத்தனையும் மீனினம் ஏமனொரு வீசுவலை
அவ்வுயிரில் யானும் ஒருவன்
கருதரிய பாரப் பெருங்கடல் கடந்தே
கடைத்தேற வேணு மென்றால்
கைத்தவளை இல்லையினி என்செய்கு வேனது
காற்றவளை கைப்பற்றினேன்
சரியமர்செய் நெடியமடை சூரகெஜ சிங்கமே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.