கண்கொண்ட பூச்சக்ர வாளகோ ளத்தையொரு
கதிகொண் டெழுந்து சுற்றிக்
ககனகூ டந்தடவி யுகசண்ட மாருதக்
காலொடு சுழன்று பின்னி
விண்கொண்ட மேகபட லத்தைச் சினந்துதன்
மெய்யன்ப னெனவு கந்து
விடஅரவின் மகுடமுடி சடசடென உதறிநெடு
மேருவொடு பாய்ந்து கொத்தித்
திண்கொண்ட வல்லசுரர் நெஞ்சுபறை கொட்டத்
திடுக்கிட விழித்து மோதித்
திறைகொண் டடித்தமரர் சிறைகொண் டணைத்துலகும்
திறைகொண்ட மயில்வா கனா
தண்கொண்ட நீபமலர் மாலையணி மார்பனே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.