கல்லா லெறிந்துமுன் எச்சிலைத் தந்துபின்
கண்ணைப் பறித்து வைத்தும்
கருதுவசை சொல்லியும் செய்யசிறு மைந்தனை
கறிசமைத் துண்ண வைத்தும்
வில்லா லடித்துமோர் பாயலில் தன்னுடைய
விரதம் செலுத்து வித்தும்
வேலையில் தூணொடு சுழன்றும் பிரானுக்கு
மெய்யன்பன் எனந டந்தும்
நல்லார் எனப்பேறு பெற்றார்கள் அதுபண்டை
நாள்செய்த பூசை ஈசன்
நன்கிருபை யாமெனக்கு உன்கிருபை யல்லாது
நாடுவது வேறு முளதோ
சல்லாப உல்லாச வில்லேறு வல்லாள
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.