முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
காப்புப்பருவம்2 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

காப்புப்பருவம்

2திருமால்✓
மணிநிலவு வாயிற் புறத்தரண் மனைத்திரு
மலிந்ததென் மதுரை ஆளும்
மன்னர்புரி யுந்தவமெ னத்திரு வுருக்கொண்டு
மாநிலத் துயிர்கள் வாழத்
திணிநிலவு மேருவைச் செண்டா லடித்தெழிற்
றேவைமா நகரில் வந்து
செட்டிகள் குலத்திறை யெனப்பெயர் தரித்துமகிழ்
செவ்வேல னைப்புரக்க
பணிநிலவு துத்திப் பணாடவி மிதித்தாடல்
பயில்பங் கயத்து ணைத்தாட்
பசுமுகிலை வென்றிவிற் பார்த்தன்உயி ருய்யஒரு
பகலையிர(வு) ஆக்கினானை
அணிநிலவு சங்கெடுத்(து) ஊதிஇக லோர்குலம்
அடங்கலு மயங்கல் காணும்
ஐயனைப் பதின்மர்புகழ் துய்யனை நினைந்துருகி
அநுதினம் பணிகு வோமே.
3பரமசிவன் தானதன தானதன-தந்தாத் தனத்தனா✓
பாதிமதி தாதகிநன் நீரிதழி ஆதியமர்
பாரம்அக லாதசடி லக்காட்டனைப் பொலார்
பால்இயம னேறிகர்கி ரீடிசிலை மோதஒரு
பாணம்அருள் வேடனுரு வத்தீர்த் தனைப் பொனேர்
பாவைகொளும் ஊடலத னால்மெலிகு வான்உரைசெய்
பாடல்விழை வால்அவள்ம னைப்பாற்செல் ஒற்றர்நேர்
பான்மையனை யாழ்முயல்ந லோனொருவன் ஆளென்மொழி
பாரறிய ஓதியும்இ சைத்தாற்றல் உற்றதோர்
ஆதியமை யேசனைய மாபதியை நாரணனொ(டு)
ஆரணன்அ நாள் அமர்இ டற்றீர்க்கை நத்தலால்
ஆரழல தாநிமிர்ச தாசிவனை ஈடில்கரு
ணாநிதியை வேள்பொடிய டத்தீய்த்த கட்பராய்
ஆகுலமெ லாம்ஒழியு மேலவருள் ஆடல்செயும்
ஆர்வனை முன் நால்வர்கள்உ யப்பார்ப்ப தற்கெனா
ஆலடியில் மேயகுரு தேசிகனை மாசுதவிர்
ஆகமவி னோதனைமி கப்போற்றி டற்கொள்வாம்;
மேதினியெ லாம்நொடியு ளேவலம தாகவரும்
வேகமயில் வாகனனை வெற்பாட்சி மிக்கசீர்
மேவியவி சாகனை மகாரதர்கள் பேணும்நவ
வீரர்தொழும் நாதனைவி றற்தர்ச்செ குத்தகூர்
வேல்குலிசம் வாள்பலகை வாளிசிலை சூலம்நிகர்
வீறுபடை தோய்தரு திறற்றோட்பெ ருக்கம்ஆர்
மீளியைஎ னோடுபல வாய்மைசொலி நாடுதொறும்
வீடுதொறும் ஏகிவெரு ளற்காட்டும் வித்தைதேர்
தீதில்அருள் நீதியுடை யானை இமை யாஅமரர்
சேனைமிகை சூழ்தலைவ னைக்கார்த்தி கைப்பெனார்
சேலனைய வாள்விழி யெலாம்நுகரும் ஏர்கொடவர்
சேயமுலை யீயும்அமு தத்(து)ஏப்ப மிட்டுநீள்
சேயைமக வான்மகளும் வேடர்தரு மாதும்நுனி
சேருமண வாளனை அடற்கூக்கு றற்செய்ஓர்
சேவலுறு கேதனனை ஈகைமலி சீர்நிலவு
தேவைநகர் வாழ்முருக னைக்காத்த ளிக்கவே.
4பார்வதி தானன தானன—தய்யனத் தாத்தனா✓
மேதகு சீரிம வான்மகிழ் கூர்எழில்
மேனைமி னாள்தரு செல்வியைத் தீக்கணால்
வேள்உடல் நீறமு னாள்முனி வார்மயல்
மீறிடு மாறுசெய் தையலைப் பாச்சொல்வார்
ஏதமெ லாம்அறும் வாழ்வருள் வாளைநல்
ஈரமு ளாருணர் கிள்ளையைப் பேர்க்கொணா
ஈரிரு மாமறை மூலம தாமிளிர்
ஈடுறு கோமள வல்லியைப் போற்றுவாம்
மாதவர் யாவரும் நாணுற நீடொளி
யார்வடி வேல்புனை கையனைப் பூட்கைமா
வால்வரு போர்வைபு ளார்விழி யால்அருள்
ஆறிரு தோள்பெறு பிள்ளையைப் போர்க்குநேர்
சீதரன் ஆழிகொள் வான்விழ மோதிய
தீரனை வேடுவர் கள்வனைப் பார்த்தன்ஊர்
தேர்தரு வானிகர் சீலனை நீர்மலி
தேவையில் வாழ்முரு கையனைக் காக்கவே.
5விநாயகர் தானத் தனதன தானனத் தாத்தனா✓
தானக் கலுழிகொள் மாமுகத் தாற்பலோர்
தாமுற் கருதுக ணாதிபற் கார்க்கொண்மூ
வானத் தமுதம தேயெனத் தேக்குநீர்
வாவிக் கரையில்வி நாயகற் போற்றுவோம்;
ஏனற் குறமகள் கேள்வனைக் கூர்த்தவேல்
ஏயப் புனைதரு தோளனைப் பூக்கள்தோய்
தேனத்(து) அளிபயில் சோலையிற் சீர்த்ததோர்
தேவைப் பதிமுரு கேசனைக் காக்கவே.
6திருமகள்✓
நான்முகப் பிரமனைத் தந்தமலர் உந்திகமழ்
நாரணன் உரத்தில் வைகும்
நல்லாளை உம்பர்முதல் எம்பரும்வி ரும்புபல
நாகரிகம் நல்கு வாளை
நூன்முழு துணர்ந்தவர் தொழுங்கலச மாமுனி
நுவன்றருள் புகழ்ச்சி யாளை
நுண்ணிடைச் செந்திரு மடந்தையை நினைந்துதினம்
நூறுதரம் அஞ்ச லிப்பாம்;
வேண்முதற் பகர்பல படைப்பொலி வுறுங்குமர
வேள்தனைக் குறவர் ஏனல்
மேவுமுது வேதியனை வெண்ணிறச் சேவலணி
மின்னுகைக் கோள னைச்செந்
தேன்முரல் கடப்பமலர் மாலையொடு தண்டும்
திருக்கைவே லும்பு னைந்து
தேவைமா நகரில்இரு தேவிமார் நடுநிலவு
செட்டியை அளித்த ருளவே.
7சரசுவதி✓
கம்பன் வருந்தி இரத்தலுந்தன்
கமல மலர்த்தாட் சிலம்புதவும்
கருணைக் கடலைப் பலகோடி
கலையும் வழுத்தக் களிகூரும்
செம்ப வளவாய் ஓதிமத்தைச்
செறியும் நிரைக்கால் வரிப்புரம்
செலுத்து மவளைப் பலகாலும்
தினமும் நினையச் சலியேமால்;
வம்பர் உரத்து நிணம் குடிக்கும்
வடிவேல் பிடித்த கரத்தானை
மணிமா மயிலிற் பவனிவரும்
வளமைக் குமர குருபரனை
உம்பர் புகழுந் தமிழ்த் தேவை
யூரில் இறைவன் தழல்நயனத்(து)
உதிக்கு முருகப் பெருமாளை
உரிமை யொடுகாத் திடனன்றே
8நவக்கிரகம் தானன தந்தன தானன தந்தன தானன தந்தனனா✓
ஆதவன் அம்புலி சேய் புலவன் குரு
ஆரும் இரண் டுயர்கோள்
ஆயுள்த ருஞ்சனி ஓரிரு வெங்குடு
ஆர்அர(வு) என்பனவே
போதவும் நன்றெனும் நூலுணர் கின்றவர்
போம்வழி கண்டெழிலார்
பூதவு டம்பத னாலும் வணங்கிடு
பூரண அன்புறுவாம்
வேதமு டன்சிவன் ஆகம மும்பகர்
வீடுவி ரும்புநர்நேர்
மேவிக டம்புரி தாள்பெறு கந்தனை
வேடர்த ருங்கொடிபால்
நீதயை இன்றுசெய்(து) ஆள்என வும்புகல்
நேயனை உம்பரெலாம்
நேடும் நலந்திகழ் தேவையின் மைந்தனை
நீடுபு ரந்திடவே.
9மெய்ப்பொருள்✓
கொற்கைஅதி பன்றனது கூன்உடல் நிமிர்த்தழற்
கொடுநோய் தவிர்த்த நீற்றைக்
கோதறும் உருத்திராக் கத்தை ஒரு பொதுநலம்
குலவுகல் லாடை தன்னைக்
கற்கையொடு கேட்கைஅருள் மாதவமு தற்றொழால்
கழறுவன முற்றும் உற்றுக்
காசினிக் குதவுதிறல் நாடுமெய் அடியவர்
கழற்றுகளை அஞ்சலிப்பாம்
விற்கைவன வேடுவர்வ ளர்த்தகிளி அனையாள் தன்
வியன் எழிற்(கு) உருகுவானை
வேழமகள் கேள்வனைச் சங்காழி மால்பகரும்
வென்றிவேற் படையு ளானைத்
தெற்கையிட மாவுடையன் அணுகாது பச்சிலைத்
திருநீறு நல்கு வானைத்
தேவைநகர் வாழவரு சிவகுரு பரன்றனைத்
தினமும் புரப்ப தற்கே.
10பல தெய்வம்✓
சைவ முதலா மறை பகரும்
சமயம் ஆறும் முடிவில்உணர்
சமயா தீதப் பதத்தில் நின்று
தவத்தோர் நினைவே சகலம்எனும்
தெய்வ நிலைதேர்ந் துயிர்வருந்தச்
செய்யா விரதத் தினர்குழுவிற்
சேர்ந்து பழகி அவரவர்சொற்
றிறங்கண் டுரைத்துத் தினம்பணிவாம்
ஐவர் மனைவி அலமரல்கண்(டு)
அளவில் கலைமுன் அளித்தானுக்(கு)
அருமை மருக னாங்குகனை
அருணைக் கிளிசொற் றுதிவிழைவார்
மெய்வந் தனைக்கேட் டுவப்பானை
வேலு மயிலும் துணையென்பார்
மிகுக்குந் தேவைப் பதியானை
விரும்பும் நெறிகாத் திடனன்றே.
11பொதுத் தெய்வம் தானன தத்தந்த-தானனத் தாந்தனா✓
ஆரண முற்கண்ட நூல்கள் உரைக்கின்ற
தாகும்அ ருட்பொங்க வாரியைச் சீர்த்தநீ
ராளர் உளத்தின்கண் ஊறிய கற்கண்டை
ஆவிய னைத்துஞ்செய் சோதியைக் கோட்டுமால்
வாரணம் ஒக்கும்பல் பாவலர் பற்றின்ப
வாழ்வினை உத்துங்க நீதிவித் தாச்சொல்சீர்
வாய்தரு கட்சிங்கம் நேர்சில ருட்டுன்றும்
வாய்மையினைச் செஞ்சொல் மாலையிட் டேத்துவாம்
காரண னற்றங்கை பால்நுகர் முச்சங்க
நாவல னைச்செங்கை வேலனைத் தாக்குபோர்
நாடும்அடற் செம்பொன் மேடம்ந டத்(து)உம்பர்
நாயக னைக் கந்த சாமியைச் சேற்கணார்
காரண மிக்கன்றி ஆடல்வி ளைத்தன்பர்
காணவெ றுக்கும்பல் பூண்ஒளிக் காட்சிசால்
காமர்வி யப்பொன்று தேவைந கர்த்தொண்டர்
காதலு டைத்தண்ட பாணியைக் காக்கவே.