முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிற்றிற்பருவம்9 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

சிற்றிற்பருவம்

72முருகனை யழைக்கும் முன்னிலை✓
காக்குந் திருமால் மருகோனே!
கயிலைக் கிரியார் தரும்புதல்வா!
கடவா ரணத்தோன் மகள்கணவா!
கானக்குறத்தி கழல்பணிவாய்!
ஆக்குந் தொழிலோன் றனைப்புடைத்திட்(டு)
அதுசெய் துவக்கும் புகழ்தோய்வாய்!
அறுமா முகத்தோர் குருபரனே!
அருணைக் கிளிஒன் றணிதோளா?
பாக்கு முலைப்பார்ப் பதிதருபால்
பருகில் பனுவல் பலபகரும்
பவளக் கனிவாய் உறுபாலா!
பரவிப் பணியச் சலியாதார்
தேக்கு மதுரத் தமிழ்புனையும்
செல்வா! சிற்றில் சிதையேலே
தேவைப் பதியில் வாழ்முருகா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
திருவடி தங்கித் திகழுமிடங்கள்✓
மெய்யர் மனம்நேர் சரவணத்தில்
மேனாள் மலர்வுற்(று) அறுமீனும்
மேனைமகளு மாம் எழுவர்
வியனார் மடியில், விழித்தொகையில்,
ஐயர் உரத்திற், சடைக் காட்டில்,
அக்கங்களில், மால் முதலோர்தம்
அணிமா முடியில், அகவெளியில்,
அருணைப் புலவன் தமிழ்ப்பாட்டில்,
வெய்ய புனத்தில், பல கோடி
வெற்பில், மிளிர்கோ புரமுகப்பில்,
வேரிக் கடம்பில், கூதளத்தில்,
வெட்சித்துணரில், மிகமணக்கும்
செய்ய கமல மலர்த்துணைத்தாட்
சேந்தா! சிற்றில் சிதையேலே
தேவைப் பதியில் வாழ்முருகா!
சிறியேம் சிற்றில் சிதையேலே.
74சிற்றிலென்பது தேகத்தியல்பு✓
விந்தைமிகுபே ரறத்திலுறும்
வேட்கைப் பொலிவும், பொருள்நாடி
வீடுதொறும் போம் வினைப்பிணியும்,
வேள்கைச் சிலைசெய் வியன்போரால்
பந்தைநிகர்மென் முலையார்க்குப்
பலவாறுருகும் அதிமோகப்
பரவைப் பெருக்கும், கடந்துனருட்
பார்வை நலத்திற் பழகியதால்
நந்தை யணிவார் குழையானும்
நறுஞ்சந் தனமால் வரைக்கோனும்
நளிர்பூம் பொழிற்றென் அருணைநகர்
நாவலனும்பெற் றுளநலத்தைச்
சிந்தையுணா முனம்எமது
சீரார் சிற்றில் சிதையேலே
தேவைப் பதியில் வாழ்முருகா!
சிறியேம் சிற்றில் சிதையேலே.
75விளையாட்டிடத்தும் மெய்யருள் வேட்டல்✓
அறிவும் அறியா மையுங்கடந்த
அருமைப் பொருளென் றருமறையும்
அளவில் பெரியோர் களும்பரவும்
அம்பொன் மலர்த்தாட் டுணையிடத்து
வெறிமென் கடம்பா தியகமழும்
வியன்போய்ப் புழுதி பிறழாதோ?
விளையாட் டயரற் கருதியுளோம்;
வெதும்பிப் புலம்பி மெலியேமோ!
வறிதுண் டுவக்கு மணற்சோறுன்
மகிமை குறியா தமைத்தேமா?
வந்தஉனையாம் வரும்போ(து) ஏன்
வந்தாய் இலையென் றிகழ்ந்தேமா?
சிறிதும் முனிய முறையுளதோ
செப்பாய் சிற்றில் சிதையேலே
தேவைப் பதியில் வாழ்முருகா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
76✓
அந்நாள் ஒருமெய்த் தொழும்பனுளம்
அறியப் புழுதி பிறழ் உருக்கொண்(டு)
அணுகிச் சிலவா றாடல் செய்தாய்;
அதுநின் தொழிலே ஆயிடினும்,
இந்நாள் எமைத்துன் புறுத்ததேல், உன்
இருதாள் மறவேம்; நின்னருட்சீர்
இன்றி யமைவ திலையெனில் இங்கு
யாம் செய்யிதுமற் றெவர் செயலோ?
முந்நாள் நெறிக்கும் பொதுவாம் நீ
முழுது மெமைச்சோ தனைபுரிதல்
முறையோ? உனையே கதியெனும் சொல்
மொழிவேம் எமக்குள் முதலாவாய்!
செந்நா வலர்பற் பலர் புகழும்
சேயே சிற்றில் சிதையேலே
தேவைப் பதியில் வாழ்முருகா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
77வேறு பொழில் வளம்✓
மைம்மருவு சீர்கண்ட மயிலின மகிழ்ந்(து) அகவி
வார்கலபம் விரிய ஆட,
மதுவுண்டு களிகொண்ட வரிவண்டி னங்கள் இசை
வகைவகை தெரிந்துபாட,
மம்மர்மலி வானரத் திரள்களிற் சில, பலவின்
வண்கனி களைப்பறித்து
வல்லியங் கொடியிற் பிணித்துக் கழுத்திட்டு
மத்தள மெனக்கொட்டலும்
கைம்மணி யெனக் கோங்கின் அலர்களைச் சிலகொளக்
கண்டமரர் இன்பமெய்தக்
கமழ்சந்த மால்வரைத் தென்றல்வந் துலவலிற்
கவின்மாரி யென உகுக்கும்
செம்மலர்ப் பொழில்நிலவு தேவைநகர் வேலவா
சிற்றிற் சிதைத்திடேலே
சிவகுருப ரானந்த சரவணப வாஎங்கள்
சிற்றிற் சிதைத்திடேலே.
78வயல் வளம்✓
மொய்வளம் பொலிதரு மலர்க்கூந்தல் அணிநிலவு
முத்தநகை மாதர் நல்லார்
மூரிநடையினை, மொழியை, விழை எகினமும், கிளியும்
முன்றிலிற் பஞ்சரத்தில்
மெய்வளர்த் துறுநாளில் வெள்ளன்னம் மற்றதை
வியந் தழுக் காறுமிஞ்சி
விரிதிரைப் புனல்வாவி நடுமலரு முண்டக
மிசைக்குல வினத்தின்மேவித்
தைவசித் துக்கலவி யின்பமும் நுகர்ந்துமலி
தரு சினை பயந்து, மோதும்
தடவரால் இனமஞ்சி நெற்பயிர்ச் சோலையிற்
சங்குமிழு முத்தைநத்திச்
செய்வரம் பிற்றுயில்கொள் தேவைநக ராதிபா
சிற்றிற் சிதைத்திடேலே
சிவகுருப ரானந்த சரவண பவாஎங்கள்
சிற்றிற் சிதைத்திடேலே.
79வேறு சந்தம் தத்தன தானன தத்தன தானன தத்தத் தனதானா✓
சற்பம தேறிந டிக்கும யூரம்
தற்குத் தகும்வீரா
தத்துவ ஞானவி ளக்கமி லாதவர்
தர்க்கத் தொளிராதாய்
அற்பர்கள் வாசல்க ளிற்றள ராமலஅ
ளித்திட் டருள்கூர்வாய்
அக்கரம் ஆறும்தி னைக்கவ லார்தம்அ
கத்திற் றிகழ்பாதா
சொற்பன கோடிக ளிற்பல வாறுசொ
லக்கற் றவினோதா
துர்க்குணம் நீடும னத்தின ராதிய
துட்டர்க் கொருகாலா
சிற்பர னார்விழி யிற்றரு பாலக
சிற்றிற் சிதையேலே
செட்டுறு தேவைந கர்க்கும ராஎமர்
சிற்றிற் சிதையேலே.
80தானன தத்தன தானன தத்தன தத்தத் தனதானா✓
நீறுமி கப்புனை வாரைவெ றுக்கும்நெ
றிக்குட் படுதீயோர்
நேயம கிழ்ச்சியு றாமல், அறத்தொகை
நித்தத் தயரா(து),ஓர்
ஆறுபொ றிக்கவு மாரர்வி ருப்பம்அ
கத்துட் குமுறா(து),ஏழ்
ஆயவி தப்பவம் ஏதுயிர் கட்கெனும்
அற்பக் குணராவார்
பாறுந ரிக்கிறை யாக, உனைப்புகழ்
பத்தித் துறைசேர்வார்
பாதம லர்த்துக்கள் சூடிடும் நற்றொழில்
பற்றிக் கொளல்பாராய்!
தேறுபு னற்சடை யாரரு மைச்சுத!
சிற்றில் சிதையேலே
தேவபு ரிக்குக னேமுனி வுற்றெமர்
சிற்றிற் சிதையேலே.
81தானதன தானதன தத்ததன தானா✓
பாவர்உண ராஇருப தத்தொருகு மாரா!
பாரதியை நேர்பலர் பழிச்சியவி னோதா!
ஓவலரி தாயபுகழ் உற்றுயர்வி சாகா!
ஊறுதவிர் ஞானவெளி யுட்டிகழ்கு ணாளா!
மாஅலற மோதிவரும் மற்குலவும் வேலா
மால்வரைதொ றாடல் செய்ம ழக்களிறு போல்வாய்!
சேவலணி தோள்வயவ சிற்றிலழி யேலே
தேவைமுரு காஎமது சிற்றிலழி யேலே.