தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்11 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்
92தந்தையின் பெரிய தேர்மீது தனையன்
சிறுதேர் உருட்டல்✓
தவசீலர் பலருக்கும் ஒருதலைவன் எனநின்ற
சதுமுகன் பாகனாகச்,
சத்தமறை பரியாக, முடிவாய பிரணவம்
தணவரிய கசையாக,
குவடாயி ரத்துள்உயர் பைம் பொற் சிலம்(பு) இணையில்
கோதண்ட மாக, உரகக்
குலமகிபன் நாணாக, முகிலனைய மாயவன்
கோதறும் பகழியாக,
நவநாத சித்தர்களும் மெச்சவளர் இரவிமதி
நல்ஆழி யாக, உம்பர்
நவிலரும் படையாக, ஒன்னலர் தமைக்கடிது
நக்கெரிப் பது குறித்துச்
சிவனேறி யூர்தரு பெருந்தேரின் மீதில்ஒரு
சிறுதே ருருட்டியருளே
செம்பொன் மலி தேவைநக ரம்பரவும் வேல்முருக
சிறுதே ருருட்டியருளே.
93திருநீற்றினை இகழ்வார் பெறுவது✓
இருவாட்கண் மயிலனைய மங்கையர்க் கரசியார்
எழுதிய முடங்கல் பற்றி
எழில்வீழி மிழலையினை விட்டுநா விற்கர(சு)
இயம்புசொற் றடையுமீறி
வருகோட்கள் பற்பலவும் அடியார்க்கு நல்லஎன
வகைபட விரித்துரைத்து
வைகைஅம் துறைநீர் நலங்குலவு தென்மதுரை
வளநக ரிடத்தில்வந்து
பொருகோட்டு வேழம்நிகர் பூழியர்பி ரானுளம்
பூரிப்ப விளையாடி ஒண்
பொலி தழைக் கையினர் தமைக்கழுவிலேற்றிப்
புவித்தலையில் நீ நிறுத்தும்
திருநீற்றை யிகழுமவர் தலைகோடி உருளஒரு
சிறுதேர் உருட்டியருளே
செம்பொன்மலி தேவைநக ரம்பரவும் வேல்முருக
சிறுதேர் உருட்டியருளே.
94முருகன் தேர் உருட்ட உருள்வன✓
காரவுணர் கையணியு மங்கலத் தரிவையர்கள்
கண்கள்நீர் மிகஉருட்டக்
கழறுமவர் இதழ்பருகும் வாயுடைத் தலைகளைக்
கன அலகை யினம் உருட்ட
நாரணன் முதற்றேவர் மனைவியர்கள் மகிழ்வெய்தி
நகுமணிப் பந்துருட்ட
நானிலம் விழுங்கியுமிழ் மலர்முத லனந்தத்தில்
நகைவந்து நனியுருட்டக்
கூரறிவு டைத்தவர்கள் இடையூ றொழிந்துபல
குகைதோறு மணியுருட்டக்
குளிர்கருணை யில்லாத நெஞ்சகத் தீயரெதிர்
கொடியநமன் விழியுருட்டச்
சீரமரும் அனையெனத் திகழ்கின்ற கைகள்கொடு
சிறுதே ருருட்டியருளே
செம்பொன்மலி தேவைநக ரம்பரவும் வேல்முருக
சிறுதே ருருட்டியருளே.
95வள்ளிநாயகி தன் மணம்பெறு இயல்பு✓
சத்திரக் கைநிலவு முகிலனைய வேடர்தம்
தவமுழுதும் வடிவமான
தனிநீல நிறவனிதை மருவும் இத ணருகில்ஒரு
தண்டணிகை முனிவனாகி
அத்திரக் கவினிலகும் விழியினது பார்வைவந்(து)
அகலந் துளைப்ப உருகி
அவிர்தினைக் கதிர்கொண்டு பின்னிய மதாணிமுலை
அணைவது குறித்து மறுகித்
தத்திரப் பொய்ப்பசி இளைப்புற்று மாத்தரத்
தரவுண்டு மயிலின் இறகுந்
தழையுங் கலந்து கொடி யிற்பினைத் திட்டபைந்
தானைபுனை தருமிடைக்கீழ்ச்
சித்திரத் தேரூர்ந்து மகிழ்குமர குருபரா
சிறுதேர் உருட்டி யருளே
செம்பொன்மலி தேவைநக ரம்பரவும் வேல்முருக
சிறுதேர் உருட்டியருளே.
96தேரினில் ஊர்ந்து வேள் செய்த ஆடல்கள்✓
ஓவரும் பலவிழிகள் உறுகரிய மேனியான்
உற்ற வேய் உருவமாற,
உததிநடு வளர் அவுணர் அருகிலயன்·வந்துவந்(து)
ஒல்கிடும் கொடுமை தீரக்,
காவல்புரி யுங்கடவுள் கையாழி தாருகன்
களம்விட்டு மகிமை எய்தக்,
கனதுயர்ப் படும் அமர ரைக்கண்டு கண்டெழும்
கருணையங் கடல் உவப்பத்,
தேவமங் கையர்தம் கழுத்திலணி மங்கலம்
திறமடைய, அசுரமடமார்
செறிகையொடு கூடிஅழ, அன்றுபல பூதர்தாம்
செயசெய எனப்பராவச்
சேவலங் கொடிநிலவு தேரேறு சேவகா!
சிறுதே ருருட்டியருளே
செம்பொன்மலி தேவைநக ரம்பரவும் வேல்முருக
சிறுதே ருருட்டியருளே.
97வேறு✓
கன்னா ருரித்துக் ககனம் அலர்
கமல மலரைத் தொடுத்தாங்கு
கவிசொற் றுனக்கே யணியுமவர்
கருகப் படுத்துங் கயவர்களும்,
பொன்னா தியமு வேடணையும்
புறம் போயகல, ஆறெழுத்தும்
புகலும் புனிதத் தினரையிகழ்
பொல்லாக் குணத்துப் புலையர்களும்,
தன்னாண் மலர்த்தாள் நிலையுணர்த்தும்
சதுமாமறையின் அறுசமயத்
தருமத்தினர்பாற் பகைவிளைக்கும்
சமணர் முதலா னவர்களும்ஆம்
ஒன்னார் குடிக்கோர் நெருப்பாவாய்
உருட்டி யருளாய் சிறுதேரே
ஓங்கும் புகழ்த்தே வையின் முருகா
உருட்டி யருளாய் சிறுதேரே.
98✓
நீரும் குளிரு மலிதருநீர்
நிலவும் பொதியைத் தலைபிறந்து
நெடும்சந் தனவான் பொழிலிடத்து
நிறைபூந் துணரிற் கமழ்மணமும்,
பாரும் ககனத் தொடுபிலமும்
பகர்முத் தமிழிற் கசிந்தொழுகும்
பசுந்தேன் மணமும், அரமகளிர்
பனிவார் குழலிற் பருமணமும்,
சேரும் பெருமை யுடைத்தாகிச்
சிலர்கண் டுவப்பப் பலர்வெருளச்
செந்தா துதிர்க்க தகைச்சூரிகை
தீட்டித் தருதென் றலம்புதுத்தேர்
ஊரும தன்நா ணுறுமழகா
உருட்டி யருளாய் சிறுதேரே
ஓங்கும் புகழ்த்தே வையின் முருகா
உருட்டி யருளாய் சிறுதேரே.
99வேறு
சந்தம்
தான தனத்தன தான தனத்தன
தனத்த தனதானா✓
ஆமையு றுப்பென வேபொறி முற்றையும்
அடக்கு மவர்வாழ்வே
ஆறுமு கத்தொரு சோதி யெனத்தெளி
பவர்க்குள் உயிர்போல்வாய்!
ஏமவ ரைச்சிலை நாதரி டத்தினள்
எடுக்க மகிழ்பாலா!
ஏழ்புவி உட்கொளும் மாயன்ம னத்தினும்
இனித்த புகழ்வீரா!
கோமள முத்தைய னேயென மெச்சிய
குணத்தர் துணையாவாய்!
கோதறு பொற்பக லாமது ரைத்தமிழ்
கொழித்த புலவோர்பால்
ஊமையு ருக்கொடு போமருள் வித்தக!
உருட்டு சிறுதேரே
ஓசைமி கத்தரு தேவைநகர்க்குக
உருட்டு சிறுதேரே.
100தனத்த தானன தனத்த தானன
தனத்த தனதானா✓
சிவக்கும் ஆறிரு புயத்து வானவ!
செருக்கு மலிதீயோர்
திடுக்க மீறிட அடுத்த பூதர்கள்
சிரிக்க அமர்நேர்வாய்!
அவக்கு ழாமற ஒழிக்கும் நான்மறை
அருத்த முதலோர்வாய்!
அளக்கர் கோளன முளைத்த மாமரம்
அதைக்கொய் துயர்தோளா!
நவக்கு ராவொடு கடப்ப மாலையை
நயக்கு மணிமார்பா
நரைத்த மாடிவர் பவர்க்க நாளொரு
நலத்தை மொழிவாயா!
உவக்கும் ஓர்கிளி துதித்த பாவல
உருட்டு சிறுதேரே
உலப்பில் தேவையில் வசிக்கும் வேலவ
உருட்டு சிறுதேரே.
101வேறு
தனதான தனனா தனத்ததன தானா✓
இமையார்த மகள்வாய் இதழ்ப்பருகும் வாயா!
இதண்மேவு குறமா திடத்துருகும் நேயா!
கமைதோயு முனிவோர் களைப்பிரிவி லாதாய்!
கடல்சூழு முலகோர் களிக்கும்அரு ளாளா!
எமையாள வருதாள் இரட்டையுடை யானே!
எழுதாத மறைநா லிசைக்கரும்வி னோதா!
உமைகேள்வர் புதல்வா உருட்டுசிறு தேரே!
உயர்தேவை முருகா உருட்டுசிறு தேரே.