தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
செங்கீரைப்பருவம்3 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
செங்கீரைப்பருவம்
12அம்பிகை முருகனை அருமை பாராட்டல்✓
பந்தைநிகர் மென்மொழிப் பார்ப்பதிதன் மணவாளர்
பாலலோ சனம் அளித்த
பாலகன்எ னக்கண் டெடுத்துச்சி மோந்தெழிற்
பங்கயச் செங்கை மிசைவைத்(து)
எந்தையெனல் முதலாய அருமைமொழி பலகூறி
இனிதுநீ ராட்டி ஆற்றி
இலகுதிரு வெண்ணீ றணிந்துபுவி உய்யும்நலம்
எண்ணிஒரு பொட்டும் இட்டுத்
தந்தையணி யும் பணிகள் அணியாது மாதுலன்
தன்மனைவி கண்டு வப்பத்
தக்கபணி பலபூட்டி ஞானமொடு சித்தியும்
தரும்அமு தருத்தி முத்திச்
சிந்தைமகிழ் கூர்வது தெரிந்துவளர் சிறுவனே
செங்கீரை ஆடியருளே
சேவலங் கொடிநிலவு தேவையம் பதிமுருக
செங்கீரை ஆடியருளே.
முருகனைப் பெறத் தவ முயன்றவர் பண்பு✓
மைதரு மிடற்றின் அழல் வரையெனப் பரமன்ஒரு
வடநீழ லிடையி லிருந்தும்
மணிமுகிலை அனையநெடு மால்அலை கடற்கண்உறு
மாசுண மிசைக் கிடந்தும்
பொய்தவிரும் நான்மறை விதித்த புத் தேள்ஒரு
புதுக்கமல மலர மர்ந்தும்
புரவிமகம் நூறியிற் றியமகிபன் அமையெனப்
பொன்னியின் கரையில் நின்றும்
கைதவர் மனம்பொரு சிறைச்சாலை யிடை உம்பர்
கட்டமுற் றும் துறந்(து)ஓர்
கானிடை திரிந்துமுது சுரர்தரு பெருந்துயர்
கழிந்துவப் பதுகு றித்துச்
செய்தவ முழுக்கஒரு வடிவான கந்தனே
செங்கீரை ஆடி யருளே
சேவலங் கொடிநிலவு தேவையம் பதிமுருக
செங்கீரை யாடி யருளே.
14ஆறுமுகங்கள் அமைந்த விவரம்✓
கூர்ந்தமதி யாளருக் கானந்த நிலயம்
கொடுத்தருள வல்ல குருவும்
கொக்கிறகு மதியிதழி ஆதிய அணிந்தருட்
கூத்தாடு கின்ற சிவனும்
ஆர்ந்தணுவில் அணுவாகி நின்றுயிர்த் தொகைமுழு(து)
அளித்தருளும் அம்மை யாரும்
அகிலமொரு பதினாலும் உண்டுண் டுமிழ்ந்தளவில்
அவதாரம் ஆகு வானும்
நேர்ந்த அவல் பொரிகடலை ஆதிய படைப்பவர்
நினைப்பவை முடித்து ளானும்
நித்தநித் தம்ககன வெளியில்எவ ருக்கும்அவர்
நேரென நிலாவு கதிரும்
சேர்ந்தறு முகத்தொடொரு திருவுருக் கொண்டவா
செங்கீரை ஆடி யருளே.
சேவலம் கொடிநிலவு தேவையம் பதிமுருக
செங்கீரை யாடி யருளே.
15முருகனுக்குள்ள முறைகள் உரைத்தல்✓
அத்தருக் கும்கலப மயிலனைய சாயலுறும்
அமலைக்கும் மதலை யாகி
ஆனைமுக னுக்கும்நவ வீரருக் கும்பொருவில்
அளியுதவு துணைவ னாகிக்
கைத்தலத்(து) ஆழிபுனை மாயனுக் கும்திருக்
கமலைக்கும் மருக னாகிக்
கண்எட்டு ளானுக்கும் மதனனுக் கம்பெருங்
கருணைமைத் துனன்ஆகி ஓர்
மத்தகக் களிறுதவு மகளுக்கும் மானருள்
மகட்கும்மண வாளனாகி
மலையமுனி அருணகிரி சிவஞானி போரூரில்
வரு தவசி ஆதி யாய
சித்தர்பற் பலருக்கோர் குருவான குமரனே
செங்கீரை ஆடி யருளே
சேவலங் கொடிநிலவு தேவையம் பதிமுருக
செங்கீரை ஆடி யருளே.
16முருகன் ஆடும்போது ஆடக் கூடியவை✓
உம்பர்முனி வரர்சித்தர் ஆதியர்கள் உள்ளத்தொ(டு)
உலகங்கள் பலவும் ஆட
உயர்மறையும் ஆகமமும் ஆதியா கியநூல்கள்
உள்ளவை யனைத்தும் ஆட
வம்பவிழ் கடம்புகுர வம்செச்சை கூதள
மலர்ந்தசிறு சடிலம் ஆட
மதியம்திகர் வதனங்க ளிற்சிறிது வெயர்வாட
வார்செவிக் குழைகள் ஆட
நம்படியர் தலைதொடும் கரபந்தி ஆட இரு
நளினமல ரடிகள் ஆட
நகுமணிக் கழலொடு சிலம்புகல கலஎன
நவிற்றொலி விளைத்தாட ஓர்
செம் பவளவரையைசந் தாடியதெ னச்சிறிது
செங்கீரை ஆடி யருளே
சேவலங் கொடிநிலவு தேவையம் பதிமுருக
செங்கீரை யாடி யருளே.
17வேறு
மகுடம்
கயல்மீன்கள் விளங்குமிடம்✓
துங்கமத என்றனது வார்துகிற் கொடியினில்
தோகைநல் லார்கண்களில்
தொடியணிகை விரலிற் கணைக்கால் களிற் சுருதி
சொல்நெறி வழாதபெரியோர்
தங்கள்செவி யில்புனல் வளங்குறைவு றாதுயர்
தடங்களில் சாலிவயலில்
தவயோக மலிகுரவர் சீடரைப் பார்க்கின்ற
தன்மையில் கதிருமதியும்
பங்கமொடு நுழைதரப் பெரிதுநீ டிப்புலவர்
பதியிலுள தருவைவென்று
பசுமலர்த் துணர்விரித் துக்குணலை யிடுகின்ற
பசுமலர்த் தலையில் என்றும்
அங்கயல் நலங்குலவு தேவைநக ராதிபா
ஆடியருள் செங்கீரையே
அயில்வேல் எடுத்திணையில் மயிலேறும் ஒருவனே
ஆடியருள் செங்கீரையே.
18வேறு
நாட்டிலுள்ள எருமைகளின் பெருமை✓
கருமைக் கரியென்(று) ஐயுறுவார்
கனைக்குந் தொனியால் தெளியவரும்
கவைக்கால் மேதி யினம்சிலபோய்க்
கரும்பைச் சுவைத்துக்க் கடைவாயால்
பருமைத் தரள மணியுமிழந்து
பழுதென் றிகழ்ந்தா லெனத்திரும்பிப்
பனிமென் மொழியார் பலர்ஒதுங்கப்
பங்கே ருகப்பூந் தடத்துழக்கிப்
பெருமைப் பொழிலின் கனியிடறிப்
பிரச மலர்கால் உகுத்தவற்றிற்
பிரிய மிலவாய்ச் சிறிதுருந்திப்
பெய்பா லொடுதம் தொழுவில்வைகும்
அருமைத் திருத்தே வையில்முருகா
ஆடியருளாய் செங்கீரை
அணிசேர் பாண்டித் தமிழ்வணிகா
ஆடியருளாய் செங்கீரை.
19வேறு
மகுடம்
உலகினியல்பு உரைத்தல்
தானன தானன தானன தானன
தானன தந்தான✓
நாவலர் யாவரும் ஊர்தொறும் ஏகியும்
நாணமி ழந்தார்கள்
நான்மறை தேர்பெரி யோர்களை ஏசும்அஞ்
ஞானர்ம லிந்தார்கள்
காவலர் பூமகள் கோவென வாய்விடல்
காணமு யன்றார்கள்
காதுத லேதொழி லாம்அதி பாதகர்
காதல டைந்தார்கள்
சேவல தேஉயர் வாமென ஓதிய
சீலர்கு றைந்தார்கள்
சீரியர் வாழ்வுற ஏனையர் தாழ்வது
தேடியு முன்றேனுள்
ஆவலெ லாமுடி வாகிடு மாறினி(து)
ஆடுக செங்கீரை
ஆசறு தேவையில் வாழ்மு ருகாநனி
ஆடுக செங்கீரை.
20தானா தனதன தானா தனதன
தானா தந்தான✓
நானா விதமய லால்நான் மெலிதலை
நாடாய் என்றாலுன்
ஞானா கரமிது தானோ எனஎணி
நாவா லுங்கூறி
ஊனார் தருமவர் பேர்ஊர் வரைபொருள்
ஊடே யுங்காதல்
ஓவா தெழநலி வேன்நீ நவில்வன
ஊறார் வம்போசொல்
வானா டரும்அகல் பூலோ கருமிக
வாழ்வான் நின்றானில்
மாறா விழைவுறல் வீணா கிடுமுனம்
வாவா என்பேனுள்
ஆனா அருளுறு மாதே வையில் எளி(து)
ஆடாய் செங்கீரை
ஆறா னனமுரு கேசா ஒருசிறி(து)
ஆடாய் செங்கீரை.
21தந்தன தானன தந்தன தானன
தந்தா தந்தான✓
மந்திர மூலமு ணர்ந்தினி(து) ஓதுபொன்
வண்டே அன்பாளர்
வண்டமிழ் மாலைவ ரைந்துப ராவும்
ருந்தே நம்பார்செய்
தந்திர யோகம்அ றிந்தணு காதப
தஞ்சேர் கந்தாமெய்
தங்கிய மாதவர் சிந்தனை யூடமர்
தந்தாய் விண்பேணும்
இந்திர கோடிதொ ழுங்கும ராகுர
விந்தார் கொண்டாய்பொய்
இன்றிய நாவினர் தந்தலை வாமயில்
என்றோ துஞ்சீர்கொள்
செந்திரு நாதன்வி யந்துசொல் சேவக
செங்கோ செங்கீரை
திண்பொலி தேவையில் வந்தமர் தேசிக
செங்கோ செங்கீரை.