முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
கடனீர் சுவற3 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

கடனீர் சுவற

4நிலைமண்டில வாசிரியப்பா✓
கடனீர் சுவற வடலுடை வேல்விடு
புண்ணிய பரங்கிரி நண்ணிய நாதா
பாசித் திரைவை காசிற் றுயிர்க
ளானியற் றாடினர்க் காவணி யளிக்குஞ்
சரவணோற் பவதாள் பரவுத லுற்றே
னுளப்புரட் டாசிவ நிலைப்புறத் துய்க்கு
நின்னைப் பசித்தற் கென்னுள நாடிக்
கார்த்திகை சிறுவ வேத்தின னினிதே
மார்கழி யுவகை சார்தர வெந்தை
மாசிலா துனதடி பேசிலா பங்குனி
விருப்பொடு நின்றனன் பொருப்பமர் தேவே.
5நேரிசை வெண்பா✓
வேதனைமுன் னாட்சிறையில் விட்ட பரங்கிரிக்கோன்
சீதமதி கொன்றையணி தேசிகற்கு—நாதனா
யேரகத்திற் ப்ரம்மோப தேசஞ்செ யெம்மிறைவ
னாரகத்து வைப்பா னலம்.
6கட்டளைக் கலித்துறை✓
நலமுறுந் தென்பரங் குன்றமர் சேய்நின்றார் நாடினளா
யலமருஞ் சோரு நெடிதுயிர்ப் பெய்திடு மாவெனவே
நிலமுற வீழ்ந்திடு மாமுரு காவென நின்றுங்கையைத்
தலைமிசை வைத்திடுஞ் சாமி யிவட்கருள் சாதிப்பையே.